(Reading time: 10 - 19 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

தொடர்கதை - கனவே கலையாதே.... - 04 - தனுசஜ்ஜீ

னா இப்படி ஆயிடுச்சு...

    மேரேஜ் கண்டிப்பா நடக்கும் வக்கீல் சார் அதுக்காக தான் நா இங்க வந்தேன். ஆனா இவுங்க எல்லாம் பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ண போறோம்ன்னு வம்பு பண்ணிட்டு இருக்காங்க சார்.

    தனலெட்சுமி, "சரிங்க ஐயா இந்த தம்பிக்கு அப்புறம் சொத்தெல்லாம் யாருக்கு சொந்தம்.

   பிரியதர்ஷினி அதிர்ச்சியாகி விட்டாள் அடிப்பாவி... இந்த கொலைகார கும்பல் எப்படி பிளான் பண்ணுதுங்க. இதுல பாவம் கதிர். என்னால அவர் மாட்டிக்கிட்டார் என்று அவள் மனதில் துடித்துக் கொண்டிருந்தாள்.

     கதிர் சார் தான் அத முடிவு பண்ணனும். அப்படி அவர் முடிவு பண்றதுகுள்ள அவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஆனா சொத்தெல்லாம் அனாதை ஆசிரமத்திற்கு போய்டும்.

     ஓ அப்படியா அனைவர் முகமும் தொங்கி விட்டது. இனி இங்க வேலையாகாது  போலையே....

    இந்தாங்கம்மா இந்த சொத்தெல்லாம் கதிருக்கு தான் சொந்தமுனு இதுல இருக்கு என்று சொத்து பத்திரங்களை அவர் நீட்டினார்.

      ஒரு நிமிஷம் வக்கீல் சார்.

    அனைவரும் திரும்பிப் பார்க்க...... அழைத்தது கதிர் தான்.

என்ன கதிர்.

பத்திரத்தை மாத்தி எழுதிருங்க வக்கீல் சார்...

அனைவரும் ஆச்சரியமாக அவனை திரும்பிப் பார்க்க...

ஆமா வக்கீல் சார் ஒரு சின்ன சேஞ்ச்... நான் உயிரோட இருக்கிற வரை நான் அனுபவிக்கிற மாதிரியும், வேற யாருக்காவது சொத்த மாத்தணும்னு நானே உங்களுக்கு  எழுதி தந்தா கூட அது செல்லாத  மாதிரியும், எனக்கு அப்புறம் அனாதை ஆசிரமத்திற்கு மட்டுமே போறதா சொத்து பத்திரத்த ரெடி பண்ணிருங்க சார்.

  ஓ ...... சுயர் கதிர்.

இப்பொழுது எல்லாரும் கதிரை வெட்டவா??? குத்தவா??? என்பதுபோல் பார்த்தனர்.

(அவனுக்கு மனதிற்குள் சிரிப்பு சிரிப்பாக வந்தது. வந்திருக்கிறது வக்கீல் இல்ல நம்மளோட பிரெண்ட் ன்னு தெரிஞ்சு இருந்தா நம்மள உயிரோட இவுங்க அனுப்புவாங்களா..... நான் வேற இஷ்டத்துக்கு ஒரு ரூல்ஸ் போட்டு சொல்லிட்டு இருக்கேன். இந்த சட்டம் எல்லாம் இருக்கா... இல்லையானு....  கூட எனக்கு தெரியாதே!!! நல்லவேளை இதுங்க எல்லாம் படிப்பு விஷயத்தில் மக்கா இருக்குறதுனால தப்பிச்சோம்.)

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.