(Reading time: 10 - 19 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

அதையும் இந்த மண்டுங்க நம்பிட்டு இருக்கு பாரு. நல்லவேளை படிச்சவன் எவனும் கூட்டத்தில இல்லை. அப்படி யாராவது இருந்திருந்தால் டங்குவார் அந்திருக்கும்.

    சரி சரி அந்த ஒட்டு மீசையும் தாடியும் எடுடா எனக்கே அங்கிள் லுக் குடுக்குற,

   ஹா ஹா....வா மச்சி ஒரு செல்பி எடுத்துக்குலாம் இந்த கெட்டப்ல செம்மையா இருக்கேன்ல.

     ஆமா மச்சி நீ உண்மையான வக்கீலுக்கே டஃப் குடுப்ப போலயே....

    இருவரும் சிரித்து தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டு அவரவர் வீட்டை சென்றடைந்தனர்.

      அடுத்த நாள் காலை ஏழு மணிக்கே கதிர் எழுந்து ரெடியாகி தன் அன்னை தந்தை காலில் விழுந்தான்.

     என்னடா ராசா புதுசா காலுலாம் விழுந்து கிட்டு,

        இல்லப்பா இன்னிக்கி கம்பெனியில புரோமோஷன்  போடுறாங்க எனக்கும்  போடணும்னு கடவுளை வேண்டி கிட்டு  உங்க  ஆசீர்வாதத்தோடு போலாம்னு விழுந்தேன்ப்பா....

 சரிப்பா பத்திரமா போயிட்டு வா....

பிரமோஸ்னா  என்ன பணம் தருவாங்களா....

தலையைச் சொறிந்தவன். ஆமாம்மா சம்பளத்தை கூட்டி கொடுப்பாங்களா அதுதான்.

ஓ..... அப்ப சரி ராசா உனக்கு தான் கிடைக்கும். சந்தோசமா போயிட்டு வா...

சரிம்மா சரிப்பா போயிட்டு வரேன்.மனதில் எழுந்த சிறு வலியுடன் அவன் நடந்தான். ஆயிரம் இருந்தாலும் பெற்றவர்கள் ஆயிற்றே. அவர்களின் ஆசிர்வாதம் இல்லாமல் திருமணம் நடக்கப் போகிறது என்பது எல்லோருக்கும் சிறிய சங்கடமாக தான் இருக்கும். பிறகு அதனை ஒதுக்கி தள்ளிவிட்டு பிரியதர்ஷினியை நினைவில் கொண்டுவந்து அவள் வீட்டை நோக்கி விரைந்து வண்டியை செலுத்தினான். அவனிடம் வண்டி இல்லை தன் நண்பனிடம் கடன் வாங்கி நேற்றே வைத்திருந்தான். ஏனென்றால் இன்று அதிக அலைச்சல் ஆகத்தான் இருக்கும் எப்படியும் இதற்கு பேருந்து ஒத்துவராது என்பதை மனதில் வைத்து அவன் நண்பனே அவனுக்கு வண்டியை கொடுத்திருந்தான்.

பிரியதர்ஷினி வீட்டை அடைந்து கதவினை தட்ட...

கதவு திறக்கப்பட்டது.அவனுடைய கண்ணை அவனாலேயே நம்ப முடியவில்லை. சிறிய சரிகை வைத்த பச்சை நிற பட்டுப் புடவையில் மிதமான அலங்காரத்தில் தேவதையாக வந்து கதவை திறந்தாள்.சத்தியமாக கதிர் எதிர்பார்க்கவில்லை. அவள் இன்னும் எழுந்திரித்து கூட

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.