விஜயின் நிலைமை அங்கு மோசமாகிக் கொண்டே இருந்தது ஹனிகாவோ நிம்மதியாகதான் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு இரு பக்கத்திலும் கௌதமின் இரு நண்பர்கள் இருந்தார்கள் அவர்களுக்கு ஹனிகாவை இப்போதுதான் பார்ப்பதால் பாசம் பொங்கி வழிய தூங்குபவளை தொந்தரவு செய்யாமல் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் செய்கையில் சந்தேகப்பட்ட விஜயோ நடப்பதை தடுக்க இயலாமல் தன் எதிரே இருந்த இனியவனை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான், அவன் அசந்த நேரத்தில் அனைவரையும் துவம்சம் செய்துவிடலாம் என நினைத்தான். ஆனால் குழந்தையின் அருகில் இருந்தவன் தான் கொண்டு வந்திருந்த பொம்மை கத்தியை எடுத்து குழந்தையின் பக்கத்தில் சாதாரணமாக வைக்க அந்த கத்தியை உண்மை என நினைத்துக் கொண்ட விஜய்க்கு உயிரே போனது.
வசமாக மாட்டிக் கொண்டோம், தனக்கு ஏதேனும் நேர்ந்தாலும் சரி ஆனால் குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது என்பது அவனின் எண்ணம். இனியவனும் விஜயன் முகபாவனையை பார்த்துக் கொண்டும் மற்றவர்களை ஒரு கண்ணால் கவனித்து கொண்டும் இருந்தான்.
விஜயின் முழு கவனம் இப்போது குழந்தையின் மீதே இருந்தது, அவன் குழந்தையைப் பார்த்தபடி கவலையாக இருக்க இருக்க இனியவனுக்கு தன் பக்க நிலைமை சாதகமாகிக் கொண்டிருந்தது.
குழந்தையை வைத்தே விஜயை தன் வழிக்கு கொண்டு வர நினைத்தான். மற்றவர்களும் இனியவனின் பேச்சை கேட்டு நடப்பதால் அவன் வந்த வேலை சீக்கிரமாகவே முடிந்துவிடும் என்ற நம்பிக்கையும் அவனுக்குள் பிறந்தது.
அந்நேரம் குழந்தை தூக்க கலக்கத்தில் அசையவே ஒருவன் அவளுக்கு தட்டிக் கொடுத்து
”தூங்கும்மா தூங்கு” என அவனின் கட்டைக்குரலில் பேசி வைக்க அவளுக்கு அந்தக் குரல் பிடிக்கவில்லை, மெல்ல கண் திறந்தாள் கண்களால் தன் தந்தையை தேடினாள்
ஆனால், அவளின் இருபக்கமும் முகமுடி அணிந்த இருவர் இருக்கவே அவளுக்கு பிடிக்கவில்லை, அமைதியாக எழுந்து அமர்ந்தவள் சுற்றி முற்றி பார்த்தாள், தன் தந்தை அங்கு தரையில் அமர்ந்திருப்பதைக் கண்டு தவழ்ந்தபடியே அவனிடம் செல்ல முயல அதை தடுக்க இவர்கள் இருவரும் அவளை தூக்க அதில் அவளுக்கு இவர்களை பிடிக்கவில்லை ஆஆஆ என அழத் தொடங்கினாள். குழந்தையின் அழுகையால் விஜய்க்கு கோபமே எழுந்தது
”டேய் விடுங்கடா என் குழந்தையை” என சத்தமாக கத்த அதில் அவர்கள் சற்று நடுங்கினார்கள் ஆனால் இனியவனோ
”ஷ் சத்தம் போடாத இல்லை உனக்குதான் நஷ்டம்” என சொல்லியவன் குழந்தையை தூக்கிக்