மதிய வேளை வரை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான் கதிரவன். அவனுக்காக சாப்பாடு கொண்டு வராமல் அவனையே வீட்டுக்கு அழைத்துச் செல்வோம் என நினைத்து வந்த ராகவனோ உறங்கும் கதிரவனைக்கண்டு வியந்தான்
”பசிக்கலையா இவனுக்கு, எப்படி தூங்கறான்னு பாரு 6 பேரை அடிச்சி சாச்சிட்டு எப்படிதான் தூக்கம் வருமோ” என அலுத்துக் கொண்டே கதிரவனை எழுப்பினான்
”கதிரவா எழுடா டேய் எழு” என உலுக்க அவனோ எழாமல் முனகவே
”எழுடா பசிக்கலையா உனக்கு சாப்பிட போலாம் வாடா” என காது கிழிய கத்தியும் அவன் புரண்டானே தவிர எழாமல் இருக்கவே
”இவனை எப்படி எழுப்பறது ம்” என பலமாக யோசித்தவன் உடனே
”வாம்மா தங்கச்சி வா வா” என பொய்யாக சொல்ல,
அதைக்கேட்டதும் உறக்கம் கலைந்து பட்டென எழுந்து அமர்ந்த கதிரவன் சுற்றி முற்றி பார்த்தான் யாரும் இல்லை ராகவனைத் தவிர கதிரவனின் நிலைமையைக்கண்டு பரிதாபமே பட்டான் ராகவன்
”ஏன்டா இப்படி பயந்து சாகற, பாரு முகமெல்லாம் வேர்த்துப் போச்சி”
”தங்கச்சின்னு சொன்னியே” என பதறிக் கொண்டு கேட்க
”சும்மா சொன்னேன் உன்னை எழுப்பினா எழல அதான் இப்படி“
”அதுக்கு வேற எதுவும் தோணலையா உனக்கு, ஒரு நொடி உயிரே போயிடுச்சி எனக்கு”
”அடப்பாவி ஏன்டா இப்படி பேசற ஏதோ என் தங்கச்சி உன் உயிரை எடுக்கற மாதிரி பேசற”
”கிட்டத்தட்ட அதேதான், அவளைப்பத்தி இனிமேல என்கிட்ட பேசாத” என கோபமாக சொல்ல ராகவனோ
”சரி பேசலை போதுமா வா சாப்பிட போவோம்”
”எங்க கூப்பிடற”
”வீட்டுக்குதான்”
”யார் வீட்டுக்கு உன் வீட்டுக்கா அவள் வீட்டுக்கா”
”டேய் என்னடா இப்படி பேசற, எல்லாம் என் வீட்டுக்குதான் கூப்பிடறேன்“
”அங்க அவள் இருப்பா நான் வரமாட்டேன்”
”யாரு மதுமதியா”
”இல்லை உன் தங்கச்சி”
”ஷ் இவன் ஒருத்தன், அடேய் காட்டான் என் தங்கச்சி பேருதான் மதுமதி, உனக்கு தெரியாதுல்ல அவள் பேர், எப்படி பேர் நல்லாயிருக்கா அவள் அழகுக்கு பொருத்தமான