(Reading time: 10 - 19 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

நிறுத்தினாள்.

“ஹலோ...மேடம்...ஏன் இன்னும் பத்தாம்பசலியாகவே இருக்கீங்க?...உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?...“ஒரு குடும்பத்துல ஆண் குழந்தை பிறந்தா...கடவுள் அருள் கொடுத்திருக்கார்!னு அர்த்தம்!...அதுவே பெண் குழந்தை பிறந்தா....அந்தக் கடவுளே அவதரிச்சிருக்கார்”ன்னு அர்த்தம்!”...பெண் எப்படி இருந்தாலும் அவளை ஆண்டவனின் அவதாரமாய்ப் பார்ப்பவன் நான்!...ஸோ...நீங்க இனிமேல் அப்படியெல்லாம் மறையாதீங்க!...என் எதிர்ல் வந்து “குட் மார்னிங்”ன்னு சொல்லுங்க!...இன்னும் சொல்லணும்ன்னா...நீங்க வந்தால்தான் எனக்கு ராசி...போதுமா?”

“நெஜமாவா?” அடிக்குரலில் கேட்டாள். அவள் உடம்பெங்கும் சந்தோஷம் அணுக்கள் தாறுமாறாய் ஓடின.

“நெஜமாய்த்தான்” என்றவன், ஒரு விநாடி யோசித்து விட்டு, “உங்களை மாதிரி தேவதை எதிர்ல வந்து எனக்கு குட் மார்னிங் சொன்னா...அந்த நாள் பூராவும் எனக்கு நல்லதே நடக்கும்!...நானும் சந்தோஷமா இருப்பேன்” என்றான்.

“தேவதையா?...நானா?...போங்க...நீங்க என்னைக் கிண்டல் பண்றீங்க”

“எனக்கு தேவதை!...என் தேவதை!...அவ்வளவுதான்” என்றான் ரவீந்தர்,

அதைக் கேட்ட விநாடியில் அவள் இதயத்திற்குள் புல்லாங்குழல் இசை ஒலித்தது.  தனியாய் ஒரு இடத்திற்குச் சென்று, “ரவீந்தர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று அவன் பேரைச் சொல்லிக் கத்த வேண்டும் போலிருந்தது.

“என்னங்க திடீர்னு அமைதியாயிட்டீங்க?” ரவீந்தர் கேட்க,

சுயநினைவிற்கு வந்தவள், “தூக்கம் வந்திடுச்சு” என்றாள் பொய்யாய்.

“அப்ப போய்த் தூங்கலாம்” என்றவாறே அவன் எழ,

“ஏண்டா அந்தப் பொய்யைச் சொன்னோம்?” என்றிருந்தது வத்சலாவிற்கு.

போகும் போது...“ஸ்வீட் டிரீம்ஸ்” என்றான் ரவீந்தர்.

“நீ வந்தால் அது ஸ்வீட் டிரீம்தான்” என்றாள் வத்சலா முணுமுணுப்பாய்.

 அந்த இரவில்

லேடீஸ் ஹாஸ்டலில் காவ்யா என்னும் கன்னிப் பெண்ணின் கனவில் காதல் டீயட் பாடினான் ரவீந்தர்.

அதே இரவில், கோகிலா என்னும் கவிதாயினியுடன் காதக் கவிதையைப் பக்கம் பக்கமாய் வாசித்துக் கொண்டிருந்தான் ரவீந்தர்.

அதே இரவில், வத்சலா என்னும் இளம் விதவையின் கனவில், அவளை சுமங்கலியாக்கி தாம்பத்யம் கண்டான் ரவீந்தர்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.