(Reading time: 10 - 20 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

  ஓகே மேடம்..... என்று கூறியவன் செய்வதறியாது திகைத்து நின்றான். அவளை விட்டு நகர அவனால் துளி கூட முடியவில்லை. அப்பொழுதுதான் அவனுக்கு தன் நண்பனின் நினைவே வந்தது.

    எக்ஸ்கியூஸ் மி சார்.

எஸ் கம் இன் தேன்மொழி.

அவள் இன்முகமாக கார்த்திக் அறையில் நுழைந்தாள்.

சொல்லுங்க தேன்மொழி எதுனா டவுட்டா....

டவுட் ல இல்ல சார் நீங்க கொடுத்த வேலை முடிஞ்சிருச்சு. எனக்கு கொஞ்சம் பர்மிஷன் தர முடியுமா சார்.

ஃபார் வாட் தேன்மொழி.

சாரி சார் ஸ்கூல்ல இருந்து கால் வந்தது எப்பவுமே அனிதா தான் கூட்டிட்டு வருவாங்க. அவங்களுக்கு கால் பண்ணா எடுக்கல ஸ்கூல்ல வேற கால் பண்ணி கூட்டிட்டு போ சொல்றாங்க ஸ்வேதா வேற தனியா இருக்காளாம் சார் அதுக்கு தான்.

என்ன தேன்மொழி இவ்ளோ லேட்டா சொல்றீங்க. முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல. இதுக்குலாம் பெர்மிஷன் கேட்டா நா வேணாணா சொல்ல போறேன். கிளம்புங்க நானும் வரேன்.

தேங்க்யூ சார். பட் ஸ்கூட்டி இருக்கு நான் போய்டுவேன் சார்.

ஆர் யூ சுயர் தேன்மொழி.

யா சார் ஐல் மேனேஜ் .

ஒகே யு மே கோ நவ்....

அவனிடம் நன்றி கூறி விடை பெற்ற தேன்மொழி வெளியில் வந்து தன் இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்தாள். சரியான நேரத்தில் அந்த வண்டியும் மக்கர் செய்தது. அதனுடன் போராடி போராடி மணி ஆனது தான் மிச்சம்.

    அவளை அனுப்பியவன் தன்னுடைய சிறு வேலையை முடித்துவிட்டு அவள் சென்றுவிட்டாளா என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி கேமராவை நோக்கினான்.

     அவள் வண்டியுடன் போராடிக் கொண்டிருப்பதை கவனித்தவன். சிறிதும் யோசிக்காது தன்னுடைய கார் கீயை எடுத்துக்கொண்டு கம்பெனி சீனியர் மேனகா விடம் அலுவலை விட்டு விட்டு வாசலை நோக்கி புறப்பட்டான். தன்னுடைய காரை உயிர்ப்பித்தவன். நேரே தேன்மொழி இருந்த இடத்தை அடைந்து ஹாரணை அழுத்த, தேன்மொழி திரும்பியதும் வண்டியில் ஏற சொல்லி சைகை செய்தான் அவளும் வேறு வழியின்றி ஏறிக்கொண்டாள்.

13 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.