(Reading time: 10 - 20 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

வளைவில் திரும்பியவனின் பார்வை  ஸ்வேதாவின் மேல் விழுந்தது.

தேன்மொழி வீட்ல பெரியவங்க யாராவது இருக்காங்களா இல்ல பாப்பா விட்டுட்டு வரதுக்கு தான் கேட்டேன்.

அப்படி என்றால்.... அப்படி என்றால்... அவள் நெஞ்சம் பதைபதைக்க.....

வீட்ல யாரும் இல்ல. நானும் அனிதாவும் மட்டும்தான்.

உங்க ஃப்ரெண்ட் வீடு ஏதாவது???

அசோக் நியாபகம் வந்தவள் இருக்காங்க என்று கூற,

அவங்களுக்கு உடனே கால் பண்ணி பாப்பாவ குடுத்து அனுப்புறிங்களா???

அவள் அவனை கூர்மையாக நோக்க....

என நாம இப்போ ஹாஸ்பிடல் போக போறோம்.

விஷயம் விபரீதம் என்பதை புரிந்தவள் உடனடியாக அசோக்கிற்கு கால் செய்தாள்.

ஹலோ அண்ணா எங்க இருக்கீங்க.

வீட்லதான் இருக்கேன்மா.... ஊர்ல இருந்து அப்பா,அம்மா, தங்கச்சி எல்லாரும் வந்து இருக்காங்கமா அதான் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டேன் மா...

அப்படியா அண்ணா நீங்க இப்போ உடனடியாக கிளம்பி வர முடியுங்களா....

என்னாச்சும்மா எங்க வரணும் சொல்லு...

கார்த்திக்கிடம் சைகையில் எங்கு வரவேண்டும் என்று கேட்க...

அவன் மருத்துவமனையின் பெயரை கூற,

அந்த மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டவள்.சீக்கிரம் வாங்கண்ணா  என்று மட்டும் கூறினாள்.

அவனும் பதற்றத்துடன் வண்டியை மருத்துவமனை நோக்கி செலுத்தினான்.

நல்லவேளையாக அசோக்கின் வீட்டிற்கு அருகே அந்த மருத்துவமனை இருந்தது.

கார்த்திக் வருவதற்கு முன்பாக அசோக் வந்துவிட்டான்.

மருத்துவமனையை கார்த்திக் அடைந்ததும் தேன்மொழியிடம் உங்க ஃபிரெண்ட் வந்துட்டாங்களா என்று கேட்க.....

அதோ என்று கையை நீட்டியவள் அசோக் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

என்னம்மா தேன்மொழி என்ன ஆச்சு எதுக்கு இங்க வர சொன்ன.....

அவள் கார்த்திக்கை பார்க்க....

இருவரையும் ஒரு சங்கட பார்வை பார்த்தவன் சாரி அனிதாக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம் கதிர் தான் கூட இருக்கான். எனக்கே ஸ்கூல்ல இருக்கும் போதுதான் கால் பண்ணி

13 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.