நாமக்கல் திருச்சி ரோட்டில் அமைந்திருந்தது ஹோட்டல் நளா.
அந்த ஹோட்டல் முழுவதுமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. ஹோட்டலின் நுழைவாயிலில் பெரியதாய் திருமண வரவேற்பு பலகை வைக்கப்பட்டிருக்க அதில் சமுத்திரன் மற்றும் ஆனந்தியும் மணமக்கள் கோலத்தில் அழகாய் புன்னகைத்து கரம் குவித்து அனைவரையும் வரவேற்றனர்.
அந்த ஹோட்டலுக்கு என்றிருந்த பார்க்கிங் ஏரியா நிரம்பி விட மெயின் ரோட்டிலேயே ஓரமாக பெரிய பெரிய சொகுசு கார்கள் எல்லாம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றிருந்தன.
திருமணத்தை நாமக்கல்லில் தான் வைக்க வேண்டும் என்று ஆனந்தியின் அப்பா பிடிவாதமாய் சொல்லி விட, மாப்பிள்ளை வீட்டார் தங்குவதற்கு என்று அந்த ஹோட்டலின் அறைகள் முழுவதுமே புக் பண்ணி விட்டனர் மாப்பிள்ளை வீட்டார்.
அதோடு அந்த ஹோட்டல் முழுவதுமே அலங்கரித்து அசத்தி இருந்தனர். அவ்வளவு பிரமாண்டமாய் கோலாகலமாய் நடந்துகொண்டிருந்தது சமுத்திரன் மற்றும் ஆனந்தியின் திருமண வரவேற்பு விழா.
இரு வீட்டாரும் பெரும் வசதி படைத்தவர்கள் என்பதால் தங்களுடைய செல்வ வளத்தை அந்த திருமண கொண்டாட்டத்தில் காண்பித்து அனைவரையும் மூக்கு மேல் விரல் வைத்து அதிசயிக்கும்படி கலக்கிக் கொண்டிருந்தனர்.
மணமேடையில் நின்றிருந்த மணமக்களை சொல்லவே வேண்டாம்... தங்களை வாழ்த்த வருபவர்களை வரவேற்று வாழ்த்தினை ஏற்றுக்கொண்டு பரிசினை வாங்கிக் கொண்டாலும் அடிக்கடி இருவரும் அவர்களுக்குள் தங்கள் காதல் லீலைகளை தொடர்ந்து கொண்டிருந்தனர்.
அதையெல்லாம் பார்க்க அருகிலிருந்த மைத்திக்கு அவ்வப்பொழுது காதில் புகை வந்தாலும் அடுத்த நொடி தன் தோழி தானே அவள் நன்றாக இருக்கவேண்டும் என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
ஆனந்தியின் தோழியாய் மண மேடையிலேயே இருக்கும்படி அவளை பிடித்து நிறுத்திக் கொண்டாள் ஆனந்தி.
மணமக்களுக்கு வழங்கும் பரிசு பொருட்களை வாங்கி வைக்க, ஆனந்திக்கு அவ்வப்பொழுது டச் அப் பண்ணி விட என்று மைத்தியை ஆனந்தி பிடித்துக் கொள்ள மைத்தியும் ஆரம்பத்தில் தாமும் எல்லா போட்டோவில் இருப்போம் என்று ஆசைப்பட்டு குதூகலத்துடன் மேடையில் நின்று கொண்டாள்.
ஆனால் அந்த போட்டோகிராபர் அவள் ஆசைக்கு ஆப்பு அடித்தான்.
சரியாக போட்டோ எடுக்கும் பொழுது மட்டும் மைத்தியை நகர்ந்து நின்று கொள்ள
Ha ha miru ponnu avane ivan
Enna seiya pora
Indha munu frnds kuttai semma.galata ma'am 👏👏👌 mythi kk senior mele loves pole 😍😍😍😁😁 nalla choice but avarukku inum bulb eriyalaye
Thank you.
episode
May be athan irukum nu nenaikiren... Pakkalam ena twist ah irukum nu...