(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தினேஷிடம் டூர் விஷயம் சொன்னாள் ரம்யா. எந்த ஊர் போறீங்க? என்றவனிடம் கோவை, ஊட்டி என்றாள். நாங்களும் ஊட்டி தான் போறோம் என்றான். ஆனால் ஒரே மாதிரி டூர் ப்ளான் இருக்காதே. நாமா எதேச்சையா எங்காவது சந்திச்சா தான் உண்டு என்றான். தினேஷ் உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா. கேளு என்றவனிடம் டூர் போறதுக்கு முன்னாடி உன்னோட அந்த ரெட் செக்ட் ஷர்ட் என் கிட்ட தரியா? எதுக்கு ரம்யா? என்கூட டூர்ல கொண்டு போறதுக்கு, அது இருந்தால் நீயே என்கூட இருக்கிற மாதிரி இருக்கும். சரி கொண்டு வந்து தரேன். என்றான் அவளிடம்.

வீட்டில் பேசி சம்மதம் வாங்குவதெல்லாம் டூர் விஷயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. அம்மாவிடம் கேமரா வேண்டும் என்று கேட்டது தான் பிரச்சினை. ஆண் பிள்ளைகளுடன் இப்படி அனுப்பவே பயமா இருக்கு. அதில் புகைப்படம் வேறு எடுக்கவேண்டுமா? என்று அம்மா அங்கலாய்க்க, அப்பா நண்பரிடம் இரவல் கேமரா வாங்கித் தந்து, ஒரு ரோல் தான்மா, கேர்புல்லா வச்சுக்கோ என்று கொடுத்தார். தேங்க்ஸ்பா என்று வாங்கி வைத்துக் கொண்டாள். டூருக்குப் போட துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள், தினேஷிடம் வாங்கிய சட்டையை முகர்ந்து பார்த்தாள். அதில் தினேஷின் வாசம் இருப்பதாய் தோன்றியது. மடித்து உள்ளே வைத்தவளிடம் அம்மா வந்து ஸ்வெட்டர் மறந்திடாத என்று கையில் கொடுக்கவும், அதையும் உள்ளே வைத்தாள்.

மாலையே புறப்பட்டு கல்லூரிக்குச் சென்று, பெண்கள் ஹாஸ்டலில் இருந்தார்கள். கல்லூரியின் அனைத்து இரண்டாம் ஆண்டு வகுப்பினரும் அன்று தான் டூர் செல்லத் திட்டம் என்பதால் ஹாஸ்டல் டே ஸ்காலர்களும் நிறைந்து ஜே ஜே வென இருந்தது. எங்கும் உற்சாகக் குரல்கள். ஒவ்வொரு பிரிவினரின் பேருந்தாக வர ஆரம்பித்தது. முதலில் கண்மணியின் வகுப்பு கிளம்பியது அவர்கள் சென்னைக்கு செல்கிறார்கள். இப்படியே எல்லாரும் சென்றுவிட, இரவு மணி இரண்டாகிவிட்டது. இவர்களின் பேருந்து மட்டும் வரவில்லை. ஒருவேளை பெண்களை அழைத்து செல்ல மறந்துவிட்டார்களோ என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்க, ஒரு வழியாக இவர்களின் பேருந்தும் வந்தது. ஏறியதும் பெண்களுக்கும் முன்பக்க இருக்கைகள் அனைத்தையும் விட்டுவைத்திருந்தனர். ஒரு மாணவனை மட்டும் காணவில்லை என்று எல்லாரும் பேசிக் கொண்டிருக்க, அவன் மெயின் ரோட்டில் காத்துக் கொண்டிருக்கிறான். போகிற வழியில் ஏற்றிக் கொள்ளலாம் என்று பிற மாணவர்கள் சொன்னார்கள். அவன் கையில் ஒரு அட்டைபெட்டியோடு ஏறினான். ஏறியதும் அதை கடைசி சீட்டின் அடியில் பதுக்கினான். என்னவென்று யாரும் அவனிடம் கேட்கவில்லை. ரம்யா அந்த பாக்ஸ்ல என்னன்னு தெரியுமாடி? என்றாள் தேவி. தெரியலேயே என்றவளிடம், “நீ இப்படியே தத்தியா இரு! உள்ளே பீர் பாட்டில், குடிக்க இங்கேயே சரக்கு வாங்கி எடுத்துட்டு வர்றானுங்க. இதுவும் நம்ம காசில தானான்னு

8 comments

• :thnkx: தோழி! படிப்பது கல்லூரியில் என்றாலும் சிறுபிள்ளைத்தனம் நீங்காதவர்கள் நம் கதைக்காலத்தில் இருக்கும் மாணவர்கள் :lol:
• நினைவலைகள் மகிழ்வானவை தோழி! நன்றி!
• நன்றி தோழி! 2000 - 2010 வருடங்களில் கூட கல்லூரிகளில் டூர் இப்படி தான் இருந்தது. 2010க்கும் செல்போன் ரொம்பப் புழங்கவும் எல்லாமே மாறிப் போச்சு!
• நன்றி தோழி! இல்லை இல்லை இது வேற காரணம் :lol:
• [quote name="Arunaa"]Nostalgic moments of college days and trips[/quote]
Exactly!!! I too felt the same 😃😃

Interesting update ma'am 👏👏👏👏👏👏 wild animals ethavdhu vandhudicho :P poramai vera kalam irangi achi trip la ena ena aga pogudhu???

Look forward to see what happens next.

Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.