(Reading time: 11 - 22 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

மீண்டும் மீண்டும் யோசித்து யோசித்து பார்த்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. ஜனா ஸ்வீனாவின் உறவு எப்படிப்பட்டது அண்ணன் தங்கை உறவு மட்டுமே... ஆனால் அவர்கள் இருவரின் உறவும் ஏற்படுவதற்கு நிச்சயம் அஸ்விட் மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்பது மட்டும் ஜனனிக்கு தெளிவாக தெரிந்தது.

 அப்படி என்றால் அஸ்விட் ஜனா இருவரும் நண்பர்களாக இருந்திருக்கவேண்டும்... ஏதோ ஒரு சூழ்நிலையில் ஸ்வீனாவின் மூலமாக ஜனாவிற்கு ஏதோ ஒரு உதவி கிடைத்து இருக்கிறது. அந்த உதவியின் பிரதிபலிப்பாக அந்த நன்றி உணர்வு தான் அடிக்கடி ஜனாவின் முகத்தில் வந்து போகிறது.

 அப்படி என்றால் ஜனாவும் ஸ்வீனாவும் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்கு முன்பாகவே அஸ்விட் ஸ்வீனாவும் இருவரும் காதலித்து இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 வெளியே பார்த்துக் கொள்ளும் போது ஜனாவிற்கும் ஸ்வீனாவிற்கும் இடையே இருக்கும் அண்ணன் தங்கை என்ற உறவு மட்டுமே பெரியதாக தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் வெளியே தெரிந்திராத ஆழமான உண்மையான ஆத்மார்த்தமான உறவு அஸ்விட் ஜனா இருவருக்கும் இருக்கிறது என்பது ஜனனிக்கு தெளிவாகப் புரிந்தது.

 அப்படி என்றால் ஜனா அஸ்விட் மிக நெருங்கிய நண்பர்கள். அஸ்விட் ஸ்வீனாவின் காதலி என்பதால் அவளை தங்கையாக நினைக்கிறான். அதேபோல தன் காதலனின் நண்பனை அண்ணனாக ஸ்வீனா பாவித்து அவனது குழந்தை விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறாள். அதுபோக உண்மையாகவே ஜனாவை அண்ணாவாக பாவித்து அவனின் வாழ்க்கை ஆனந்தமாக அமைய வேண்டுமென்று அவனுக்காக ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறாள். எப்படிப்பட்டவள் இவள்.... இவளைப் போல ஒரு உறவு கிடைக்க ஜனா நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

 இப்படிப்பட்டவள் தோழியாக எனக்கு கிடைத்திருக்க நான் மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணினாள். அதோடு இந்த ஸ்வீனாவைப் பற்றிய விஷயம் கூட உண்மையாக இருக்குமோ என்று யோசித்து விட்டோமே என்று மிகவும் வருந்தினாள்.

கோவிலில் அன்று பார்த்த அந்தப் பெண்மணி எதையோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் அல்லது அவரது மகளிடம் அவரது தோழி ஜனாவை பற்றி தவறாக சொல்லி இருக்கிறாள். அதனால்தான் இந்தப் பெண்மணியும் அப்படி பேசி இருக்கிறார். அதனால் அவர்களிடம் ஜனா பற்றி அவர்கள் கொண்டிருக்கும் தவறான அபிப்ராயம் சரியல்ல என்பதை சொல்வதோடு நான்தான் அவருடைய மனைவி... என்னை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம்

16 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.