(Reading time: 8 - 16 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

காம்ப்ளக்ஸ் ஓனர் சாம்பசிவத்திடம் சொல்ல அவர் ஏ.சி.யை உள்ளே அழைத்தார்

       உள்ளே சாம்பசிவத்துடன் அட்மினிஸ்டிரேஷன் மேனேஜர் கல்பனாவும் அமர்ந்திருந்தாள்.

       “ம்...மிஸ்டர்.சாம்பசிவம்!...செக்யூரிட்டி வேலைக்குத்தனே இண்டர்வியூ?”  கேட்டார்.

       “ஆமாம் சார்!

       “வர்றவங்க கிட்டே இதுக்கு முன்னாடி இங்க நடந்த விஷயங்களைச் சொன்னீங்களா?...இல்லை சொல்லாம மறைச்சு...இண்டர்வியூ பண்றீங்களா?” கறார்த் தொணியில் கேட்டார் ஏ.சி.

       “சார்...அதையெல்லாம் சொன்னா...யாருமே வரமாட்டாங்க சார்!”  கெஞ்சலாய்ச் சொன்னார் சாம்பசிவம்.

       “ஸோ...யாரோ அப்பாவி ஒருத்தன் வரணும்!...அவனும் இங்க வந்து சாவணும்!...நம்ம பட்டியல்ல இன்னொரு சாவு கூடணும்!...அப்படித்தானே?”

        “சார்...அது...வந்து...

        “த பாருங்க மிஸ்டர்.சாம்பசிவம்!...நடந்த விஷயங்களை ஓப்பனாச்  சொல்லுங்க!...துணிஞ்சு வர்றவன் வரட்டும்!...இல்லேன்னா விடுங்க!சொல்லி விட்டு ஏ.சி.எழுந்து வெளியேற

       சாம்பசிவமும்  கல்பனாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்

       வெளியே வந்த ஏ.சி. நேரே பக்கத்து பில்டிங் வாட்ச்மேன் இறந்து கிடந்த இடத்திற்குச் சென்று  அந்த இடத்தைப் பார்வையால் ஆராய்ந்தார்.  அவருடைய போலீஸ் மூக்கு தடயத்தை ஸ்மெல் பண்ண முயற்சித்தது.

       ஏதும் பிரயோஜனமில்லாததால் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு உடன் வந்த கான்ஸ்டபிளிடம்

       “ப்ச்!...வாய்யா...மேலே போய்ப் பார்த்திட்டு வரலாம்!”  என்று சொல்லி  அவரையும் அழைத்துக் கொண்டு நேற்றிரவு ஆள் நடமாட்டம் தெரிந்த அந்த தேர்ட் ஃப்ளோர் கடைக்குச் சென்றார்.

       அது  ஸ்போர்ட்ஸ் மெட்டீரியல்ஸ் விற்பனை செய்யப் படும் ஒரு கடை.

       இவர்களைக் கண்டதும்  வாங்க சார்...என்ன வேணும்?” என்று கேட்டபடி கடை முதலாளி போலிருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து சிரித்த முகத்துடன் எதிரில் நின்றார்.

       “ஸாரி...நாங்க இப்ப எதுவும் வாங்க வரலை!...ஜஸ்ட்..ஒரு சின்ன என்கொயரிக்காக வந்திருக்காம்!ஏ.சி. சொன்னார்.  அவரது கழுகுப் பார்வை அந்தக் கடையை அங்குலம்

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.