(Reading time: 8 - 16 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

அங்குலமாய் அளந்து கொண்டிருந்தது.

       “ஓ...நேத்திக்கு பக்கத்து பில்டிங் செக்யூரிட்டி இறந்து கிடந்தாரே?...அது சம்மந்தமான என்கொயரியா சார்?”

       “யெஸ்...மிஸ்டர்.....................ஏ.சி. இழுக்க

       “என் பேரு ராஜேந்திரன் சார்!

       “குட்!...அப்புறம் மிஸ்டர் ராஜேந்திரன்...உங்க கடைல யாராவது நைட்ல கடைக்குள்ளார ஸ்டே பண்றாங்களா?”

       இட வலமாய்த் தலையாட்டியபடியே கண்டிப்பா இல்லை சார்!...பட்...எங்க கடைக்குள்ளார நைட் டைம்ல ஆள் நடமாட்டம் தெரிவதாக...இதுக்கு முன்னாடியே ரெண்டு மூணு செக்யூரிட்டிக சொல்லியிருக்காங்க!உண்மையை சற்றும் தயங்காமல் சொன்னார் அந்தக் கடைக்காரர்.

       “ம்...எங்கிட்டேயும் சொன்னாங்க!...அதனாலதான் இங்க என்கொயரிக்கே வந்தோம்!

       “சார்...செத்துப் போனானே பக்கத்து பில்டிங் செக்யூரிட்டி சுந்தரம்?...அவன் கூடச் சொன்னான்...இதெல்லாம் பேயோட வேலைன்னு!...பட்...நான் நம்பலை!சொல்லி விட்டு தன் தலையை இட வலமாய் ஆட்டினார் அந்த ராஜேந்திரன்.

       “குட்..அப்படியே இருங்க!என்று சொல்லி விட்டு அந்தக் கடையை விட்டு வெளியேறி  நேரே மொட்டை மாடிக்குச் சென்றார் ஏ.சி.தீனதயாள்.

       அங்கு சென்றதும் நேற்றிரவு அந்த உருவங்கள் நின்று கொண்டிருந்த  இடத்தை ஆராய்ந்தார்.

       இரவு நேரத்தில் அங்கு அப்படியான சம்பவங்கள் நடந்ததற்கான அறிகுறியே துளியும் இல்லாமல் பகல் நேர மொட்டை மாடி சாதாரணமாயிருந்தது.

       அந்த இடத்தைப் பல முறை சுற்றிச் சுறி வந்தும், எந்த வித பிடிமானமும் கிடைக்காது போக  உதட்டைப் பிதுக்கிக் கொண்டு திரும்பினார்.

       அவர் கீழிறங்கும் போது எதிர்ப்பட்ட காம்ப்ளக்ஸ் ஓனர் சாம்பசிவம் சார்...நீங்க சொன்ன மாதிரி இண்டர்வியூவுக்கு வந்திருந்த செக்யூரிட்டிக கிட்ட உண்மையைச் சொன்னோம் சார்!

       “என்ன ஆச்சு?”

       “ஒரு பயல் கூட நிக்கலை சார்...எல்லோரும் தலை தெறிக்க ஓடிட்டாங்க!என்றார் வருத்தமான முகத்தோடு.

       சில நிமிடங்கள் யோசனையுடன் தாடைப் பகுதியைச் சொறிந்த ஏ.சி.

       “டோண்ட் வொரி!...நான் எனக்குத் தெரிஞ்ச ஒரு பையனை அனுப்பறேன்!...அவன்

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.