தன் ப்ரைவேட் ஜெட் பறக்கத் தொடங்கிய உடனேயே மொபைலை கையில் எடுத்தான் ஆனந்த். அவனையும் அகிலாவையும் வைத்து செய்திதாளில் வந்திருந்த செய்திக்கு பிறைநிலா பதில் சொல்லி இருந்தாள். அதைப் பார்த்து விபரங்களை நினைவு வைத்துக்கொள்ள அவனுடைய ப்ரைவேட் செக்ரட்டரி அறிவுறுத்தி இருந்தார். விஜயத் தீவில் பத்திரிக்கையாளர்கள் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கக்கூடும் என்று ஒரு கேள்வி & பதில் லிஸ்ட் வேறு கொடுத்திருந்தார்.
ஆனந்த் பிறைநிலா ஸ்மைல் செய்துக் கொண்டிருந்த விடியோவை ப்ளே செய்தான். பிறைநிலா அவளுக்கே உரிய விதத்தில் பொறுமையாக, தெளிவாக கம்பீரமாக பேசினாள்.
“வணக்கம். உங்கள் எல்லோருக்கும் அரசக் குடும்பத்தின் மீது இருக்கும் அன்பும் அபிமானமும் எங்களுக்கு தெரியும். எங்களுக்கும் உங்கள் அனைவரின் மீதும் அதே அன்பு இருக்கிறது எனபதும் உங்கள் அனைவருக்கும் தெரியும்.
என் தம்பியும், நம் தீவின் வருங்கால அரசருமான ஆனந்த் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. என் தம்பி ஜெய்ப்பூரில் இருக்கும் அவனின் நண்பரின் உதவியோடு நம் தீவிற்கு புதிய திட்டங்கள் உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட்டிருக்கிறான்.
போட்டோவில் இளவரசருடன் இருப்பது அகிலா. அகிலா நம் அரசிக்கு நிதி மற்றும் பொருளாதார நிர்வகிப்பில் உதவ புதிதாக நியமிக்கப் பட்டுள்ளவர். இளவரசரின் ஜெய்ப்பூர் பயணத்தின் போது இளவரசர்க்கு துணையாக திட்டங்கள் பற்றிய கால அட்டவணை தயாரிக்க அகிலாவும் உடன் இருந்தார். அகிலா மட்டுமல்லாமல் அவரின் குழுவில் இருக்கும் இன்னொரு பெண்மணியும் அவர்கள் இருவருடன் உடன் இருந்தார்.
பத்திரிக்கையில் வெளியான போட்டோவில் உடன் இருந்தவரை நீக்கி விட்டு செய்தி வெளியாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதுப் போல, செய்திகளை முழுவதுமாக ஆராய்ந்து சொல்லாமல் திரித்து சொல்வது நம் தீவிற்கு புதிது.
அரசக் குடும்பத்தினரான நாங்களும் உங்கள் குடும்பத்தில் ஒருவர். இதுப் போன்ற செய்திகள் வெளியானால் எப்போதும் போல முழு விபரங்களை அறிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நன்றி.”
விடியோவின் கீழே அரசக் குடும்பத்து வெப்சைட்டில் புதிதாக சேர்க்கப் பட்டிருந்த அகிலாவின் வேலை விபரம் தொடர்பான லின்க்கும் இருந்தது.
ஆனந்தின் மனம் லேசானது. எந்தப் பிரச்சனை வந்தாலும் அக்கா பார்த்துக் கொள்வாள் என்பது அவனுக்குத் தெரியும்! இப்போதும் அதையே தான் செய்திருக்கிறாள்.
பிறைநிலாவின் விடியோ போஸ்ட்டின் கீழே கவனித்தான். மில்லியனுக்கும் அதிகமான
HahHahha sariyana potti 👌akila oda counter attack was awesome!! Aunty and anandh kurukavandhutangale
Venumna vijaypriya and agilaanand oda jodi vachiye publicity panalame 😍😍😍😍 real couples real miracles
lovely and interesting update bindu ma'am 👏👏👏👏👏
Akila mele Priya kku irupathukk peyar envam??? Avanga fight semmaya irukka....guess priya is trying to over protect anandh
Thank you