தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்
தன் ப்ரைவேட் ஜெட் பறக்கத் தொடங்கிய உடனேயே மொபைலை கையில் எடுத்தான் ஆனந்த். அவனையும் அகிலாவையும் வைத்து செய்திதாளில் வந்திருந்த செய்திக்கு பிறைநிலா பதில் சொல்லி இருந்தாள். அதைப் பார்த்து விபரங்களை நினைவு வைத்துக்கொள்ள அவனுடைய ப்ரைவேட் செக்ரட்டரி அறிவுறுத்தி இருந்தார். விஜயத் தீவில் பத்திரிக்கையாளர்கள் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கக்கூடும் என்று ஒரு கேள்வி & பதில் லிஸ்ட் வேறு கொடுத்திருந்தார்.
ஆனந்த் பிறைநிலா ஸ்மைல் செய்துக் கொண்டிருந்த விடியோவை ப்ளே செய்தான். பிறைநிலா அவளுக்கே உரிய விதத்தில் பொறுமையாக, தெளிவாக கம்பீரமாக பேசினாள்.
“வணக்கம். உங்கள் எல்லோருக்கும் அ ... ் பிரச்சனை வந்தாலும் அக்கா பார்த்துக் கொள்வாள் என்பது அவனுக்குத் தெரியும்! இப்போதும் அதையே தான் செய்திருக்கிறாள்.
பிறைநிலாவின் விடியோ போஸ்ட்டின் கீழே கவனித்தான். மில்லியனுக்கும் அதிகமான
This story is now available on Chillzee KiMo.
...