தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
“கிளாஸ்ல எல்லாரும் என் பிரதர்ஸ்னு சொன்னியே!” ஆமா அப்படித்தான்! அப்போ இனிமேல் நானும் உனக்கு ஒரு அண்ணன். ஓகே வா. ஓகே என்று கட்டை விரலைக் காட்டினாள். நான் வீட்டுக்கு ஒரே பையன். எனக்கு ஒரு தங்கையோ தம்பியோ இல்லைன்னு நிறைய நாள் யோசிச்சிருக்கேன். நீ தான் இனிமேல் என்னோட தங்கை. அதைக் கொண்டாட ஒரு ஸ்வீட் என்றவன், அவனே ஒரு கிண்ணத்தில் குலாப் ஜாமுன் எடுத்து வந்தான். ஹே எனக்கு பிடிச்ச ஸ்வீட் இது தான்னு எப்படி உனக்குத் தெரியும். கேண்டீன்ல இதைத் தானே அடிக்கடி வாங்கி வச்சுட்டு இருப்ப, பார்த்திருக்கேன். ரம்யா மனதுக்குள் நினைத்தாள், நாம தான் யாரையும் கவனிக்கிறதுல்ல, எல்லாரும் நாம என்னென்ன பண்றோம்னு தெரிஞ்சு வச்சிருக்காங்க. தேங்க்ஸ் என்று அதை சாபிட்டவள் , மீல்ஸ் வரவும் அதை சாப்பிடத் தொடங்கினாள். சாதத்தில் தயிரை விட்டுப் பிசைந்து கொண்டிருந்தவளிடம், சர்வரிடம் கொஞ்சம் சாம்பார் கேட்டான். அதை அவளின் இலை ஓரத்தில் வைக்க சொன்னவன், தயிர் சாதத்துக்கு, சாம்பாரைத் தொட்டு சாப்பிட்டுப் பாரேன். வித்தியாசமான டேஸ்ட் ஆக இருக்கும் என்றான். உண்மையில் அப்படித்தான் இருந்தது. எப்போதும் தம்பி ரகுவுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ரம்யாவுக்கு, அண்ணன் இருந்தால் இப்படிதான் அக்கறையாக இருப்பான் போல என்று நினைக்கத் தோன்றியது.
ஊட்டியில் பிரபலமான பொட்டானிக்கல் கார்டன் சென்று பார்த்துவிட்டு, ஊட்டி ஏரிக்குச் சென்றனர். பெண்கள் எல்லாரும் ஒரே படகில் செல்வதாய் சொல்லவும், பத்திரமாக இருக்கும்படி மாணவர்கள் சொல்லியனுப்பினார். படகுச் சவாரி அற்புதமாய் இருக்க, தோழிகள் பிடித்த பாடல்களைப் பாடினர். கொஞ்சம் நேரம் ஷாப்பிங் பண்ணதும் மலையை விட்டு இறங்க வேண்டும் என்றும் கோவையில் இரவு உணவை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றும் முடிவாக, அவளிடம் இருந்த பணத்தில் அவளுக்கு இயற்கையாகக் கிடைக்கும் கற்களில் செய்த மாலை, தினேஷுக்கு மெல்லிய நிறத்தில் முழுக்கை குர்தா , ரகுவுக்கு ஒரு கீ-செயின், அம்மா அப்பாவிற்கு ஊட்டித் தேயிலை, சாக்லேட் என்று பார்த்துப் பார்த்து வாங்கினாள். டூர் முடிவதும் ஒரு சிலருக்கு வருத்தமாகவும் ஒரு சிலருக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேம் அழைக்கவும் எல்லாரும் ஒரு க்ரூப் போட்டோவுக்கு நின்றனர்.
பேருந்து மலையை விட்டு இறங்கிய சமயத்தில் ரம்யாவிற்கு ஒரு பிரச்சினை வந்தது. அவளின் காதுகள் நன்கு அடைத்துக் கொண்டன. உயரத்தில் இருந்து இறங்குவதால் காதடைப்பு ஏற்பட,மடியில் அவளைப் படுக்கவைத்து, ஒரு மூடி தண்ணீரை விட்டுப் பார்த்தாள் தேவி. ஆனால் சரியாகவில்லை. மலையில் இருந்து முற்றும் இறங்கியதும் சரியாகிவிடும் என்று சமாதானம் சொன்னாள் தேவி. பயணம் தொடர்ந்து அதிகாலையில் கல்லூரியில் வந்து