(Reading time: 8 - 16 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

அன்று ரம்யாவின் பிறந்த நாள். கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்தில் புதிய ஆடை அணிந்து அதற்கு ஏற்ற அதே சிவப்பு வண்ணத்தில் அணிகலன்கள் அணிந்து வந்தாள்.  அவள் வகுப்பு மாணவன் ஒருவன், “என்ன இன்னிக்கு நடமாடுற போஸ்ட் பாக்ஸ் மாதிரி வந்திருக்க? என்ன விஷேசம்?” என்றான். “ஏய் கிண்டல் பண்ணாத! இன்னிக்கு என் பர்த்டே என ரம்யா சொல்லவும் வாழ்த்தினான். தினேஷ் மின்னல் வேகத்தில் வந்து, மதியம் லேப்ல கொஞ்சம் வேலை இருக்கு, பார்க்க முடியாது, ஈவ்னிங் ஒரு அஞ்சு நிமிஷம் உன் கிளாஸ்ல வெயிட் பண்ணு.  வந்திர்றேன், என்று சொல்லிவிட்டு விரைந்தான். இன்னிக்குத் தான் என் பர்த்டேன்னு மறந்துட்டான் போல என்று நினைத்தவள், தனது வகுப்பினருக்கு தான் கொண்டு வந்திருந்த சாக்லெட்களைக் கொடுத்தாள். வகுப்புகள் முடியவும், தேவி ஒரு ரெண்டே நிமிஷம் எனக்காக வெயிட் பண்றியா. தினேஷ் வர்றேன்னான். அவன் வந்ததும் பார்த்துட்டுக் கிளம்பலாம் என ரம்யா சொல்லி முடிக்கவும் அவன் அவளின் வகுப்புக்கு வெளியில் வரவும் சரியாக இருந்தது. நான் கிளாஸுக்கு வெளில நிக்கிறேன் என்று வெளியேறி சுவரோரம் நின்றாள் தேவி. ஹேப்பி பர்த்டே ரம்யா என்று சொன்னவாறே, சிறிய பரிசு ஒன்றை நீட்டியவனிடம், கிப்ட் லாம் எதுவும் வேணாம் தினேஷ் என்று மறுத்தாள் ரம்யா. 

தொடர்வேன்

Next episode will be published on 7th Mar. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

6 comments

  • :thnkx: தோழி! எஸ்கேப் கொஞ்ச நாள் தான். அம்மா கிட்ட தப்பிக்க முடியுமா :sigh:
  • Next week kk ena surprise nu sollama vittutingale :Q: interesting update ma'am 👏👏👏👏 vara varam Ramya avanga amma kitta irundhu nalla es aguranga eppo matuvangalo?? Ippo Ramya dhinesh kk order poda arambichitanvala :eek: Dinesh es agita nalladhu 😁😁 cute one!!<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.