This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“கலக்குற ப்பா புவனேஸ்வரி. நான் இந்த கணக்கை டேலி செய்ய வருஷக் கணக்காகி இருக்கும்” – ஆருத்ராவின் புகழ்ச்சியை அமைதியாக அடக்கத்துடன் ஏற்றுக் கொண்டாள் புவனேஸ்வரி.
முன் தினம் வீட்டுக்கு அழைத்ததைப் போல ஆருத்ரா ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்கு வர அழைக்க மாட்டாளா என்ற ஆசை புவனேஸ்வரியின் மனதுக்குள் இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு ஜெய்யை பற்றி தெரிந்துக் கொண்டிருக்கிறாள். அவனை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
புவனேஸ்வரி தன் ஆசைகளை மனசுக்குள் வைத்து போராடிக் கொண்டே வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.
“புவனேஸ்வரி, என் அண்ணி கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும். பத்து நிமிஷத்துல வந்திடுறேன். யாராவது என்னை தேடி வந்தா என்னன்னு கேட்டு வைக்குறீயா?” – ஆருத்ரா கேட்ட உதவி மின்னாமல், முழங்காமல் பெரிய இடியை புவனேஸ்வரியின் மேலே இறக்கியது.
தலையை அசைத்து ஆருத்ராவிடம் சரி என்று சொல்லி விட்டு வேலையை தொடர முயன்றாள். அவளையும் மீறி கண்கள் கலங்கியது. இந்த செய்தியை அவள் எதிர்பார்த்திருக்கவில்லையே.
ஜெய் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தாள் ஆனால் அவன் சொந்த வாழ்விலும் முன்னேற்றம் இருக்கும் என்று எப்படி யோசிக்காமல் போனாள்!
எத்தனை முயன்றும் அவளால் மனதில் ஏற்பட்ட வலியை அடக்க முடியவில்லை.
வேலையை தொடர முடியாமல் அவள் தடுமாறிக் கொண்டே இருக்க, சொன்னதுப் போல பத்து நிமிடங்களுக்குள்ளேயே திரும்பி வந்தாள் ஆருத்ரா.
“யாராவது வந்தாங்களாப்பா புவனேஸ்வரி?”
புவனேஸ்வரி இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
“புவனேஸ்வரி? என்ன ஆச்சு? எதுக்கு ஒரு மாதிரி இருக்க? என்னப்பா?” – அன்பும் அக்கறையுமாக ஆருத்ரா விசாரிக்கவும் புவனேஸ்வரிக்கு வாய் விட்டு அழ வேண்டும் போல இருந்தது.
“ரொம்ப நேரமா மானிட்டர் பார்த்ததால லைட்டா தலைவலிக்குற மாதிரி இருக்கு ஆருத்ரா” – முடிந்த அளவு சாதாரணமாக பதில் சொன்னாள் புவனேஸ்வரி.
“அதானா கண்ணும் சிவந்து இருக்கு. போ புவனேஸ்வரி போய் ஒரு காபி, டீ ஏதாவது குடிச்சுட்டு வா. ஒவ்வொரு நிமிஷமும் நீ இப்படி உட்கார்ந்திருக்கனும்னு கிடையாது. நீ
raji kk too much cholesterol 😈😈😈 babies meleyum no akarai thangichi mele yum.no interest
Thank you.