(Reading time: 11 - 22 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

அவன் குரலில் இருந்த தெளிவை அவன் முகத்திலும் அந்த கண்களிலும் தெரிந்தது. அவன் கண்களில் அத்தனை உறுதி. அவன் உதட்டில் மெலிதான ஒரு புன்னகை. அவன் முகத்தில் அத்தனை ஒரு மகிழ்ச்சி. முன்பு பார்த்ததைவிட ஆணழகனாக முன்பு பார்த்ததைவிட கவர்ச்சிகரமாக இருந்தான்.

ஸ்வேதா... ஸ்வேதா என்று புலம்பிக் கொண்டே தன் பின்னாலே திரிந்தவன் இவன்... பைத்தியக்காரன் போல புலம்பியவன் இவன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்... அந்த அளவிற்கு தெளிவும் துணிவும் மகிழ்ச்சியும் அவன் முகத்தில் தாண்டவமாடியது.

 இது எல்லாத்துக்கும் காரணம் உண்மையான அன்பு ஒன்று. அவனுக்காகவே அவனை நேசிக்கும் ஒருவர் கிடைத்தததால் கிடைத்தது. ஜனனியின் அன்பு கிடைக்க ஜனா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தாள் ஸ்வேதா.

உங்கள பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜனா... ஆனால் சிறிது வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. உங்களை மிஸ் என்று அவள் சொல்ல வரும்போதே இடையில் பேசத் தொடங்கினான் ஜனா.

வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை ஸ்வேதா. பழையதை பேசி மீண்டும் மனதை பாரமாக்கி கொள்வதைவிட நடந்ததையும் நடக்கப் போவதை ஏற்று கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதே புத்திசாலித்தனம். எங்கு பார்த்தாலும் நல்ல நண்பர்களாக பேசிக்கொள்ளலாம். உனது திருமண வாழ்க்கை மிக சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் என்று சொல்லி அவள் முன்னால் தன் கையை நீட்டினான்.

அவன் தன் கையை நீட்ட அவள் தன் கையை நீட்டி அவன் கையை பிடித்து குலுக்கினாள். இனி குட் ப்ரண்ட்ஸ் என்று அவள் சொல்ல அவன் சிரித்துக்கொண்டே திரும்ப கிச்சனுக்குள் பாத்திரங்கள் அடுக்கும் சத்தம் மிக மிக மெதுதாக தான் கேட்டது. ஆனால் ஜனாவிற்கு சிரிப்பாக வந்தது. ஏன் என்றால் இத்தனை நாட்கள் பாத்திரங்கள் ஒன்றோடு ஒன்று உரசுவது போல ஒரு சத்தம் கூட கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டவனுக்கு ஜனனிக்குள் ஏற்பட்டு இருக்கும் இந்த பொறாமை சிறு பெருமையையும் கொண்டு வந்து சேர்த்தது.

 என் மனம் முழுவதும் ஜனனி மட்டுமே நிறைந்திருக்கிறாள். நான் அவளை என் மனைவியை ஏற்றுக் கொண்டேன். என் மனதில் இருப்பதை இனி அவளிடம் சொல்ல வேண்டும். புது வாழ்க்கையை அவளுடன் தொடங்க வேண்டும் என்று விதவிதமான எண்ணங்களுடன் ஸ்வேதாவுடன் இணைந்து வீட்டிற்கு வந்தான் ஜனா. 

வீட்டிற்குள் வந்தவனுக்கு அதிசயமாக இருந்தது எனலாம். ஜனனி ஆபீஸ் செல்வதற்கு தயாராகி வந்து நின்றாள். உள்ளே வந்தவர்களை பார்த்ததும் முகத்தில் தெரிந்த

11 comments

  • :eek: Jana eppo ippadi ivalo thelivanaru??? Edhavdhu mayam mandhram potingalo :P anyway Swetha and jana oru nalla terms la pirinjadhu and frndship treaty sign panadhu super :cool: ore meet la she understood janu but jana eppo express pana poraru?? Idhula poramai vera facepalm good going ma'am 👏👏👏👏👏👏<br />Look forward to see wat happens next.<br />Thank you.
  • Story a like pani read panringanu therinchathum rompa happy... Next update unakagave uyir valkiren final epi koduken.. Thank you so much dear Tamil... Thanks for ur supporting
  • Good evening dear Jeba! மனத்தில் கணந்தொறும் மாறும் உணர்ச்சிகளை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். ரொம்ப கஷ்டமான பணி! சிறந்த எழுத்தாளருக்கே மட்டுமே சாத்தியம்! அதனால் தான் 2069பேர் ஆர்வமுடன் படித்து ரசித்துவிட்டார்கள். வெற்றி!
  • hi malar enraiya epi migavum arumaiya iruthathu :-) jana & janu manam vtti pesinale oru thirvu kitaikum :cool: story la matum ellamal nam valkailaium iruthal happy life :-) .....aprm unakkagave uyir vazhkiren story la last epi ena achu :Q: konjam atha pathi next update kutuga :yes: & waiting 4 your next epi :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.