(Reading time: 8 - 15 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

வந்திடறேன்”

“ம்ஹ்ஹும்...அப்படியெல்லாம் உன்னை விட முடியாது!...நான் கண்டிப்பா உன் கூட வருவேன்” என்று சொல்லி விட்டு எல்லோரையும் சுதாகர்ஜி பார்க்க,

“ஆமாம்...ஆமாம்..நீங்களும் கூடப் போயிட்டு வாங்க ஸ்வாமி” என்றான் அந்தக் குலத்துக்காரன்.

****

டாக்ஸியில் கோயமுத்தூர் நோக்கிச் செல்லும் போது, சுதாகர்ஜி டிரைவருக்குக் கேட்காத வண்ணம் சன்னக் குரலில் கேட்டார். “எல்லாம் சரி...ஆனா நிஜமாவே இத்தனை காயங்களைப் பண்ணிக்கிட்டியே?...அதான் கஷ்டமாயிருக்கு!...இவ்வளவு ரியாலிட்டி தேவையா?”

“இல்லை ஜி... “செய்வன திருந்தச் செய்”ன்னு சொல்லுவாங்க!...நாம செய்யற வேலை திருத்தமா இருந்தா...அது தப்பாயிருந்தாலும் ஜெயிக்கும்!...அதை விட்டுட்டு ஏனோதானோன்னு செஞ்சா அது நல்ல காரியமாயிருந்தாலும் தோத்துதான் போகும்!...” என்றான் ரவீந்தர்.

“அதுக்காக நீயே காயம் பண்ணிக்கிட்டியா?”

“ஆமாம்...வேணுமின்னே ஒரு பள்ளத்துல விழுந்து எந்திரிச்சேன்...அதுல சில சிராய்ப்புக் காயங்கள் ஆச்சு!...அப்புறம் அப்படியே போயி அந்தப் புதருக்குள்ளாரே “தொப்”புன்னு விழுந்தேன்....முட்கள் கீறி நிறைய காயங்கள் கிடைச்சுது!...” என்றான் ரவீந்தர் காயங்களை ஒவ்வொன்றாய்ப் பார்த்துக் கொண்டே,

“இப்பத் தெரியுது...நீ எப்படி மார்க்கெட்டிங்ல சாதிக்கறே?ன்னு...சில நடிகர்கள் பட்த்தோட கேரக்டருக்காக தங்கள் உடலை வருத்தி குண்டாவாங்க...இல்லேன்னா ஒல்லியாவாங்க!...அது மாதிரியும்...ஒரு அர்ப்பணிப்போட உன் வேலையைச் செய்யறே...அதனாலதான் ஜெயிக்கறே” என்றார் சுதாகர்ஜி.

****

 

“அப்பா...எங்கேப்பா அவரு?...அவருக்கு என்னப்பா ஆச்சு?” படபடப்பாய்க் கேட்ட வத்சலாவின் கண்களில் ஈரம்.

நடந்தவற்றையெல்லாம் கஸ்தூரி அய்யா விளக்கமாய்ச் சொல்லி விட்டு, “இப்ப அவரும் நம்ம  சுதாகர் ஸ்வாமியும் கோயமுத்தூர் போயிருக்காங்க!...எல்லாம் சிராய்ப்புக் காயங்கள்தான் அநேகமா இன்னிக்கு ராத்திரியே வந்தாலும் வந்திடுவாங்க” என்றார்.

“அவர் எப்பவுமே இப்படித்தான்...எல்லாத்துக்கும் நாத்திகம் பேசறார்!...குடி வந்த அன்னைக்கு  “பால் காய்ச்சணும்!”னு சொல்றேன்... “அது..எவனோ...என்னைக்கோ...புது வீட்டுல வேற எதுவும் செய்ய முடியாது என்பதற்காய் பால் காய்ச்சி...சர்க்கரை போட்டுக் குடுத்திருக்கான்...அதையே சம்பிரதாயமாக்கினா எப்படி?” ன்னு கேட்கிறார்!...அதே மாதிரி அவர் ஆபீஸ் போகும் போது

3 comments

  • Nejamave adi padavachikitara 😱😁 Marketing pulli temple-i nalla market panitaru... :D ini mr Ji kk nalla varumanam varumo??? Interesting update sir 👏👏👏👏👏 <br />Thank you.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.