(Reading time: 7 - 13 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

இரவு உறங்க மட்டும் வீட்டிற்கு செல்வாள்.

      அசோக்கின் பெற்றோரும் அனிதாவை ஒருமுறை மருத்துவமனையில் பார்த்து விட்டு சென்று விட்டனர். ஸ்வேதா அசோக்கின் தங்கை கயல்விழியுடன் ஒன்றி விட.... மொழிக்கு வந்து போவதற்கு கொஞ்சம் உதவியாக இருந்தது. கார்த்திக் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வந்து  ஒரு மணி நேரம் இருந்து விட்டு சென்று விடுவான். அசோக் பகல் முழுதும் மருத்துவமனையில் தான் அனிதாக்கு துணையாக இருப்பான். ஆனால் அனிதாவிடம் பேசவில்லை.

      டிஸ்சார்ஜ் செய்யும் நாளும் வந்தது. அபிராமியும், கதிரும் அன்று காலையிலே மருத்துவமனைக்கு வந்து விட்டனர். அனிதாவின் பெற்றோர்களுக்கு அபிராமியை காண கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆனால் அபிராமி எப்பொழுதும் போல் இயல்பாக அவர்களிடம் பேசினார். அனிதாவிடம் அன்பாக நலம் விசாரித்தார். கதிரும் எதையும் முகத்தில் காட்டாமல் பணிவுடன் பேசினான். அனிதாவின் அம்மாவிற்கு இப்படி ஒரு நல்ல புள்ளய வேணாம்னு சொல்லிபுட்டாளே என்று அங்கலாய்த்தார்.

       பெரியவர்கள் வெளியே  பேசிக்கொண்டிருக்க, உள்ளே அனிதா தனியாக இருப்பதை அறிந்தவன். அங்கிள் ஒரு அஞ்சு நிமிஷம் உங்க பொண்ணு கூட பேச பர்மிஷன் கிடைக்குமா???

    சிறு யோசனை செய்தவர் சிரித்த முகமாக சம்மதம் தெரிவித்தார். அவருக்கு நன்றியை கூறியவன் அவள் இருக்கும் வார்டை நோக்கி நடை போட்டான்.

     அனிதா திரைசீலையை விலக்கி வெளியே வேடிக்கை பார்த்தபடி இருக்க......

நிதானமாக உள்ளே நுழைந்தவன். அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். பிரவுன் கலர் சுடிதாரில் சோக சித்திரமாக நின்றுக் கொண்டிருந்தாள்.

     என்ன மேடம் எப்புடி இருக்கிங்க. எல்லாம் பேக் பண்ணி ரெடியா இருக்கு கிளம்பிட்டிங்க போல, குரல் வந்த திசையை திரும்பி பார்த்தவளின் கண்ணில் ஆச்சர்யம் வந்து ஒட்டிக் கொண்டது. தான் வேண்டாம் என்று சொல்லி அசிங்கமாக திட்டிய பிறகும் தன்னை பார்க்க வந்திருக்கிறானா..... இது கதிர் தானா...... என்று அவள் விழி விரித்து பார்க்க......

           இப்புடியே பார்த்து பார்த்து என்ன அந்த கோழி குண்டு குள்ள கட்டி வச்சிட்டு...  மேடம் என்ன வேணாம்னு சொல்லிட்டிங்கனு கேள்விபட்டேன்.

           இப்பொழுது அவளுக்கு கோபம் சிறிது எட்டி பார்த்தது.

        எஸ் எனக்கு அந்த உரிமை இருக்குனு நினைக்கிறேன் மிஸ்டர் கதிர் என்று அவள் கைகட்டி அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டே கூற,

          அவளது அந்த செய்கையில் மயங்கியவன் அவளை நெருங்க .....

20 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.