(Reading time: 7 - 14 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

   என்னாச்சுங்க......

   ச்சீ..... பப்ளிக் ப்ளேஸ் - ல இப்புடி தான் அசிங்கம் பண்ணு வாங்கலா..... குழந்தைங்கலாம் இருக்கு ச்ச...

    அச்சோ தர்ஷீ என்ன ஆச்சு.....

    அத வாய்ல சொல்லவே கூசுது.

    அப்புடி என்ன நடந்துச்சுங்க.

    ஹஸ்பண்ட் அண்ட் ஒயிஃப் -னா வீட்ல போய் இந்த கண்ட்ராவிய பண்ண வேண்டியதுதான..... இல்லல்ல அந்தாளு மூஞ்ச பார்த்த பக்கா பொறுக்கி மாறி இருக்கான்..... யாரயாவுது தள்ளிட்டு தான் வந்துருப்ப்பான் என்று தர்ஷினி புலம்ப .....

    இப்பொழுது கதிருக்கு விஷயம் கொஞ்சம் பிடிபட ஆரம்பித்தது. ஏங்க கொஞ்சம் அமைதியாயிருங்க. இதெல்லாம் இங்க சகஜம்-ங்க... என்ன கதிர் பேசுறிங்க. புரிஞ்சிதான் பேசுறிங்களா.....

   அய்யோ தர்ஷீமா நா அவங்களுக்கு சப்போர்ட் பண்ணல. நடக்குறத சொன்னேன்.

     என்னவோ போங்க இங்க இருக்கவே எனக்கு புடிக்கல வாங்க போலாம்.

      அவள் கையை இறுக்கி பிடித்தவன். அமைதியாக நடந்தான். இருவரும் பைக் நிறுத்திய இடத்திற்கு வர,

        அவள் அதே நிலையில் முகத்தை தொங்க போட்டு இருந்தாள்.

        யாரோ ஒருத்தருக்காக நம்ம சந்தோஷம் இல்லாம இருக்கனுமா தர்ஷீ.

      அவனையும் சேர்த்து வருத்தப்பட வைக்கிறோம் என்று அறிந்தவள். சிறிது புன்னகை பூசி சாரி கதிர். வாங்க போவோம் சின்ன துணி கடையா பார்த்து நிறுத்துங்க கதிர்.

      என்னங்க இன்னும் வாங்கி முடிக்கலயா.....

இல்ல கதிர்.

ஓ..... இவ்ளோ பேக் இருக்கா அதுதான் ஷாப்பிங் முடிந்ததுனு நினைச்சேங்க.

   பரவால கதிர்.

   அவனும் சிரித்தபடி தலையசைத்து வண்டி எடுத்தான்.

    அது ஒரு சிறு துணி கடையில் நின்றது. அங்கு சென்று முரண்டு பிடித்த கதிரை சம்மதிக்க வைத்து, கதிரின் உதவியுடன் அவளுக்கு பிடித்த மாதிரி மாமனாருக்கும், கதிரின் தம்பிக்கும் துணி எடுத்தாள். பிறகு இரண்டு மாப்பிள்ளை மற்றும் குழந்தைகளுக்கு என எல்லோருக்குமே ஒன்று என்று வாங்கி விட்டாள்.கதிருக்கே தெரியாமல் அவனுக்கும் ஒரு துணியை எடுத்து இரகசியமாக வைத்துக் கொண்டாள்.

9 comments

  • :D 😱 Indha rendu dozen eppadi manage panaporangalo dharshu??? Idhula oru black sheep vera 3:) mother in law kitta apology kettu samdhan kodi parakavittutnga :cool: interesting update ma'am 👏👏👏👏👏 aduthu ena nadakumnu parka waiting.<br />Thank you.
  • Thank u so much tamil sri dr.🤗🤗.ela sis kathira kanom nu tha elaru vanthurukanga. Mathapadi normal time intha extra ticket irukathu sis😊🤗🙏🏻
  • மிக்க நன்றி ஐயா. தங்களுடைய உற்சாகம் மிகுந்த வார்த்தைகள் எனக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன. உங்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி🙏🏻😊.
  • nice update sis atuthu ena natakum :Q: pappom but mamarumaka and mappilaiyota appa amma vathathu tha konjam over :P :grin: waiting for your next episode
  • Good morning dear Dhanusanji!<br />ஷாக் ஆகி நின்றது, தர்ஷஇனி மட்டுமல்ல, நானும்தான்! எவ்வளவு அழகா கேரக்டர்களை கதையில் கோர்த்து அசத்தறீங்க! குடும்ப உறவுகளை பின்னிப் பிணைந்து கதை போகிற போக்கு, ருசிகரமாக உள்ளது! பாராட்டுக்கள்!
  • Nice episode ma'am :hatsoff: . Kandipa kutties intro ku thani episode thaan venum pola :grin: . Tharshu ini enna pana poraanka :Q: .waiting for next episode ma'am :-) .

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.