(Reading time: 7 - 13 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

“ம்ம்ம்...அர்ச்சனா...நான் ஒண்ணு கேட்டா...நீ கோவிச்சுக்க மாட்டியே?”

“முதல்ல கேளுங்க!...கோவிக்கலாமா?...வேண்டாமா?ன்னு நான் அப்புறம் முடிவு பண்ணிச் சொல்றேன்!” தன் நையாண்டி சற்றும் மாறாமல் சொன்னாள் அர்ச்சனா.

“வந்து....நீ இப்ப வேலை பார்க்கற கம்பெனில...என்ன ஸ்கேல் தர்றாங்க உனக்கு?”

இந்தக் கேள்வியை அவனிடமிருந்து எதிர்பார்க்காத அர்ச்சனா, முகத்தைச் சுளித்துக் கொண்டு, “எதுக்குக் கேட்கறீங்க?” என்றாள்.

“ஒரு காரணமாய்த்தான் கேட்கறேன்...சொல்லு!”

“பிடித்தமெல்லாம் போக மாசம் பதினாலாயிரம் வரும்!”

“ஓ.கே...அதுக்கு மேலே வருமானம் வர்ற ஒரு வேலை நான் குடுத்தா ஏத்துக்குவியா?”

நிதானமாய் யோசித்து, ஓரளவிற்கு யூகித்து விட்ட அர்ச்சனா திருப்பிக் கேட்டாள், “நீங்க ஆரம்பிக்கப் போற அந்த கிரீஸ் டீலர்ஷிப் பிசினஸுக்கு ஆபீஸ் வேலைக்கு என்னைப் போட்டுடலாம்னு நினைக்கறீங்க!...அப்படித்தானே?”

“எக்ஸாட்லி!...சொல்லு...ஆர் யூ ஓ.கே!”

அர்ச்சனா உடனே பதில் சொல்லாமல், கீழுதட்டைக் கடித்துக் கொண்டு எதையோ தீவிரமாய் யோசிக்க,

“உன்னைய என்னோட பிசினஸ்ல வொர்க்கிங் பார்ட்னரா சேர்த்துக்கிட்டு...சம்பளத்திற்கு பதிலா லாபத்துல ஒரு பங்கு தந்திடறேன்!.!” இன்னும் கொஞ்சம் மேலே போனான் சுரேஷ்.

தன் தலையை இட, வலமாய் ஆட்டிய அர்ச்சனா, “அந்த அளவிற்கு எனக்குப் பேராசையும் இல்லை!...அதில் எனக்கு உடன்பாடும் இல்லை!...எனக்கு என் வேலைக்கு ஏற்ப சம்பளம் குடுத்தால் போதும்!”

“அர்ச்சனா...உன் கிட்ட பேசி பழகினதுல உன்னோட முழுமையான திறமையை நான் புரிஞ்சுக்கிட்டேன்!...அதோட உன்னோட நேர்மையையும் புரிஞ்சுக்கிட்டேன்!...ஆக்சுவலா...இந்த நிலைமைல இருக்கற எனக்கு என் கூட ஒரு நம்பிக்கையான ஆள் வேணும்!...அதான்...” என்று சுரேஷ் இழுக்க,

“ஓ.கே!...உங்க சிச்சுவேஷனை நான் புரிஞ்சுக்கிட்டேன்!...பட்...நான் என்னோட முடிவை இப்பவே சொல்ல முடியாது!...கொஞ்சம் டைம் குடுங்க!...நான் என்னோட அப்பாகிட்டேயும்...அம்மாகிட்டேயும் கலந்து பேசிட்டு சொல்றேன்!..கம்பெனியை பத்திப் பிரச்சினையில்லை...ஈஸியா வெளிய வந்துடலாம்!”

“இடஸ் ஓ.கே!...நீ அவங்க கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணிட்டே பதில் சொல்லலாம்!” என்றவன் அவளை மனம் நெகிழச் செய்யும் விதமாய், “சத்தியமாய்ச் சொல்றேன் அர்ச்சனா!...என்னோட

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.