(Reading time: 6 - 12 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அதனால் விளைந்ததோ இந்த சிறுவன், அதான் மனது வேதனைப் பட்டு கண்ணீர் விட்டாரோ? என்று பலவிதமாக யோசித்துக் கொண்டிருந்தான். அம்மாவுக்கு இப்படி துரோகம் செய்து விட்டாரே,’ என்று மனம் வருந்தினான்.

“சரி, வா அப்துல் போகலாம் ரெக்கார்டிங் தியேட்டருக்கு போகலாம். இந்தப் பையனும் வந்தாச்சு, வா போகலாம்."

சுயநினைவுக்கு வந்த அப்துல் "சரி வாப்பா, போகலாம்....ஆஹ்ன், கேட்க மறந்துட்டேனே, இந்தப் பையன் பேர் என்ன?"

"கரெக்ட், இந்தப் பையனுக்கு பேரே இல்ல, நாம இப்பவே  இவனுக்கு ஒரு பேர் வச்சுடுவோம், என்ன சொல்றே அப்துல்?"

"என்னப்பா, இவனுக்கு ஒரு பேரு இல்லையா?"

" இல்லைப்பா!"

"' 'அஜய்' எப்படி இருக்கு பேர்?"

"அதென்ன, அஜய்ன்னு பேர்?” என்று கேட்டான் அப்துல் .

"வெரி சிம்பிள், அ' ன்னா,  அப்துல், ஜா ன்னா , ஜாபார்" என்று அவர் விவரிக்கவும், அப்துலுக்கு ஒன்னும் புரியவில்லை.

"சரி வாப்பா!"

அந்தச் சிறுவனுக்கு நாமகரணம் சூட்டினார், ஜாபர் .

"உன் பேர் அஜய், இனிமே உன் பேர் அஜய் புரிஞ்சுதா?" என்று அழுத்தமாக அந்த சிறுவனுக்கு புரியும் வகையில் கூறினார், ஜாபர்.

  அவர்கள் ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்றார்கள், அப்போது பிரஸ்சிலிருந்து, புது பையன் பேர் என்ன?, என்ன பாட்டு பாடப் போகிறான்?" என்ற   கேள்விகளை கேட்டார்கள்.

அவன் பேர் "அஜய்" என்றும், மற்றபடி என்ன பாடல் என்றும், எந்த படமென்றும், எல்லா விவரங்களும், ஜாபரே கூறிவிட்டார்.

ரெக்கார்டிங் தியேட்டர் உள்ளே போய் அஜயிடம் எப்படி பாட வேண்டுமென்று சொல்லி கொடுத்தார், அவனும் ஒரு ரீஹர்சல் செய்தவுடன் அடுத்து டேக் போய்விட்டார்கள், ஜாபருக்கு ஒரே ஆச்சர்யம், ஒரு தடவை சொல்லிக் கொடுத்தவுடன், உடனே பிடித்து கொண்டு பாடிவிடுகிறான் அருமையாக. அங்கிருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம், அப்படியொரு அருமையான குரல்.

எதிர் பார்த்ததை விட சீக்கிரமே ரெக்கார்டிங் முடிந்து விட்டது, அது அந்த பையனால்.

முடிந்தவுடன் அப்துல் வீட்டுக்கு கிளம்பிப் போய் விட்டான், அவன் வீடு வந்ததும் தன் அம்மாவை பார்க்க சென்றான்.

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.