(Reading time: 6 - 12 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அங்கே நிக்கத் அவனைப் பார்த்ததும், " எப்படிப்பா போச்சு இன்னியோட ரெக்கார்டிங்?"

"ஹ்ம்ம், நல்லா போச்சு அம்மி. "

"ரொம்ப நல்லது, சரி போப்பா, உன் பீவி ஆமிராவை போய் பார். அப்புறம் நேரே போய் உன் அம்மியை பார்த்தியான்னு சண்டை போட போறா, போடா!"

"அதை விட முக்கியமா உங்களோட பேசணும், அவ என்ன புதுசா ஏதாவது பேசப் போறாளா, என்ன?"

"ஹ்ம்ம், சொல்லு என்ன விஷயம் என்கிட்டே பேச?"

" இன்னிக்கு ரெக்கார்டிங்குக்கு வந்தப் பையனைப் பற்றி தான் பேசணும்?

"ம்ம், அந்தப் பையனுக்கு என்ன?"

“ அந்தப் பையன் அப்படியே, நான் சின்ன வயதில் இருப்பதுப் போல் இருக்குது , அச்சு அசல் என்னைப் போல!"

"அதுக்கு?"

"ஒரு வேளை, வாப்பாவுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமோ, அப்படி வந்த பையனா இருந்தா? அவரு உங்களுக்கு துரோகம் பன்றாரோன்னு தோணுது? "

"அது ஒரு வேளை... நீ யோசி, நீ ஏதாவது தப்பு பண்ணியிருக்கியான்னு, எனக்கு உன் வாப்பாவை நல்லா தெரியும்!"

"என்னப்பா? கொஞ்சம் உன்னை பற்றி நீ யோசித்தாயா? வாப்பா மேல சந்தேகம் வருதே, உன்னை பற்றி யோசித்தாயா, என் புருஷனை பற்றி நல்லா எனக்கு தெரியும், கொஞ்சம் நீ ஏதாவது தப்பு பண்ணியிருக்கியான்னு யோசி," என்று கூறி "இப்ப நீ உன் ரூமுக்கு போ நல்லா யோசிச்சு என்கிட்ட சொல்லு."

அவன் மனைவி ஆமிராவோ "என்னங்க இன்னிக்கு ரெக்கார்டிங் எப்படி போச்சு? உங்க அப்பா எவ்வளவுன்னு சொன்னாரு?"

"உனக்கு எப்பப்பாரு பணம்தான்.."

“ஆமா நல்லா சம்பாரிச்ச நீ!"அவள் நொடித்துக் கொண்டாள் .

அவன் அங்கிருந்து கிளம்பி மாடிக்கு சென்று விட்டான். அவன் காதில், அவன் அம்மா பேசியதே விழுந்தது… அம்மீ ஏன் அப்படி சொன்னாங்க, நமக்கு எந்த பெண்ணிடமும் பழக்கமில்லையே, அம்மீக்கு என் மேல சந்தேகம் எப்படி வந்தது..... என்று பல விதமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் கோயம்புத்துரில் இஞ்ஜினியரிங் படிக்கும் போது கடைசி வருஷத்தில் ஒரு நாள், அம்மீ போன் செய்தாங்க  “ஹலோ அம்மீ எப்படி இருக்கீங்க? "

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.