(Reading time: 6 - 12 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 02 - விஜேஜி

வீட்டிற்கு வந்த ஜாஃபர் குளித்து விட்டு சாப்பிட வந்தார், உட்கார்நததவர், தன் மனைவியிடம், " நிக்கத், வீட்ல யாரும் இல்லையா?"

"இல்லைங்க, மருமக வீட்ல இல்லைங்க."

பிறகு அந்த சிறுவனைப் பற்றி எல்லாமே கூறினார். "அந்தச் சிருவன் அச்சு அசல் நம்ம அப்துல் சின்ன வயதில் இருந்த மாதிரியே இருக்கிறான். என்னைப் பற்றி எனக்கு தெரியும், உனக்கும் தெரியும், அப்துல் ஏதாவது பெண்ணிடம் காலேஜ்ல.....ஒன்னும் புரியல்லம்மா!!!"

" சரி சாப்பிடுங்க, காலம் எல்லாத்தையும் விளக்கிக் காட்டும், கவலைப் படாம சாப்பிடுங்க." என்று அவரை சமாதானம் செய்தார் நிக்கத், ஆனால் மனதளவில்

அவரும் வரதத்தப்பட்டார்.

எல்லா பசங்களையும் ஒரு ஆஸ்ரமத்தில் விட்டிருந்தார், ஜாஃபர்.

குழந்தைகள் நன்றாக சாப்பிட்டு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த நாள் காலை அந்த ஆஸ்ரமத்து இன்சார்ஜிடம் போனில் தான் டிரைவரை அனுப்புவதாகவும், சிறுவன் 'ஒன்றை' அனுப்பி வைக்கும்படி ஜாஃபர் கூரினார்.

டிரைவர் வந்தவுடன், சிருவனை அனுப்பி வைத்தார் ஆஸ்ரம இன்சார்ஜ்...

ஒரு படத்தில் அப்பாவும், மகனும்  பாடும் பாடலுக்கு, ஏற்கெனவே தன் மகன் அப்துலிடம் சொல்லி இருந்தார்.  இந்தப் பையனைத்தான் பாட வைக்க வேண்டுமென்று விரும்பினார். இதோ அவனும் ரெடி..

அப்துல் வந்து தன் அப்பாவுடன் ஆஃபீஸில் காத்துக் கொண்டிருந்தான், அந்த முகம் தெரியாத சிறுவனுக்காக!

"யாரு வாப்பா , இந்த புது பையன்?"

"நீதான் பார்க்க போறியே!" 

இரண்டு நிமிடத்தில் " ரோடில் பிச்சை எடுத்த பையன்," என்று கூறுகையில அவர் கண்ணில் கண்ணீரைக் கண்டான் மகன்.

என்ன ஆச்சு வாப்பாவுக்கு, ஏன் கண்ணீர் விடவேண்டும்.... என்று மனதில் கேள்வி கேட்டுக் கொண்டான்.

சிறிது நேரத்தில் கார் கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டது ...

ஆபீஸ் கதவை திறந்து அந்த சிறுவனை உள்ளே அனுப்பினான் டிரைவர் இமாம்.

உள்ளே வந்த அந்த சிறுவனை பார்த்தார்கள் ஜாபரும், அப்துலும்.

அப்துல் அதிர்ச்சியில் அப்படியே வாயை திறந்து உட்கார்ந்திருந்தான், தன் சின்ன வயதை தானே பார்ப்பது போல் இருந்தது. ‘ஒரு வேளை அப்பாவுக்கு வேறு ஒரு தொடர்பு இருக்குமோ?

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.