(Reading time: 6 - 11 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

வியாபாரம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே போக, லாபமும் கணிசமாக உயர்ந்து கொண்டே போனது.

பத்து மாதங்களுக்குப் பிறகு,

சுரேஷ் மறுபடியும் கேட்டான், “ம்ம்...அர்ச்சனா!...நீ ஏன் இன்னும் சம்பளம் மட்டுமே போதும்னு பிடிவாதம இருக்கே?...இது என்னோட நிறுவன் இல்லை...நம்மோட நிறுவனம்!...இதில் நீ வொர்க்கிங் பார்ட்னர்!...ஸோ...நீ தாராளமா லாபத்துல பங்கு எடுத்துக்கலாம்!...ஏனென்றால்...அந்த லாபத்துல பாதிதான் என் உழைப்பு!...மீதி உன்னோடது!...உனக்கு சரி பங்கு உரிமையுண்டு!”

“நீங்க இந்த அளவுக்கு என்னை உயர்வா நெனைக்கறதுக்கு முதல்ல நான் என்னோட நன்றியைச் சொல்லிக்கறேன் சுரேஷ்!...அப்புறம்...நீங்க இந்த பிசினஸ்க்கு முழு முதலீடு போட்டவர்...அதனால முழு லாபமும் உங்களுக்குத்தான் உரிமை!...நான் போடறது வெறும் உழைப்பு...அந்த உழைப்பிற்கு சம்பளம் மட்டுமே போதும்!...” அர்ச்சனா அதே நிலையில் உறுதியாய் நின்றாள்.

அவளது அந்த உறுதிப்பாடும்...நேர்மையும் சுரேஷின் மனத்தில் அர்ச்சனாவின் மீது ஒரு தனி மரியாதையையும், உயர்வான அபிப்ராயத்தையுமே தோற்றுவித்தன.

“ஹூம்!...இவள் இடத்தில் வேற யாராவது இருந்திருந்தா...இன்னேரம் சரிக்குச் சரி லாபம் தந்தே ஆக வேண்டும்னு கொடி பிடிச்சிருப்பாங்க!...ஆனா இவளோ கொடுத்தால் கூட மறுக்கிறாள்!”

அவன் மனதில் அது ஒரு உறுத்தலாக வளர ஆரம்பித்தது. ”ஒரு வேளை நான் அவள் உழைப்பைப் பயன்படுத்திக் கொண்டு...வருகிற லாபத்தை சொளையாக அனுபவித்துக் கொண்டு...அவளுக்கு ஒரு சொற்ப சம்பளத்தைக் குடுத்து அவளை ஏமாற்றுகிறோமா?”

தன் மன உறுத்தலை அவன் தன் தாயிடம் பகிர்ந்து கொள்ள,

நிதானமாய்ச் சிரித்தவள், “நாந்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே?...அந்த தேவநாதனும் சரி...அவர் குடும்பத்தில் மற்றவர்களும் சரி...கொஞ்சம் கூட பணத்தாசையே இல்லாதவங்க!ன்னு...எல்லா விஷயத்திலும் நீதி...நேர்மை...நியாயம்னு இருக்கறவங்கப்பா...அவங்க!” என்றாள்.

“இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களே...ஆச்சரியமாயிருக்கும்மா!”

“அவரு ரிடையர்டு ஸ்கூல் வாத்தியார்...குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைப் பாடம் எடுத்து...எடுத்து அப்படியே மாறிட்டார்!...தன் குடும்பத்தார்களையும் அதே போல் மாத்திட்டார்!”

“நீ சொல்றதெல்லாம் சரிம்மா...ஆனாலும் எனக்கு மனசு ரொம்ப உறுத்தலாயிருக்கேம்மா?...என்னை விட பல மடங்கு கஷ்டப்பட்டு உழைக்கறா

3 comments

  • Nice episode :hatsoff: . Movie la ore song la ellam nadakura maathiri Inka ore episode la niraya nadanthidu :clap: . Archana kida marriage proposal panna Muthal Suresh thelivaahanume :Q: .waiting for next episode :-) .

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.