Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 11 - 21 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Vallamai thanthu vidu
Pin It

Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 15 - Chillzee Story

This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.

குட் மார்னிங்” – அமுதவள்ளி அவள் அறையில் இருந்து லிவிங் ரூமிற்கு வந்த உடனே கதிரின் வாழ்த்து அவளை வரவேற்றது.

அவன் மேலே அதிக கவனத்தை செலுத்தாமல், பெயருக்கு “குட் மார்னிங்” என்று முனுமுனுத்தாள் அமுதவள்ளி.

கதிர் அதைப் பற்றி அதிக அக்கறை காட்டியதாக தெரியவில்லை. கையிலிருந்த பேப்பரை அவளிடம் நீட்டினான்.

“உன் ஃபிரென்ட் ஆயுஷ் பத்தி நியூஸ் வந்திருக்கு”

அமுதவள்ளி ஒரே ஒரு வினாடி கதிரை ஆராய்வதுப் போல பார்த்தாள். இவன் எதையோ மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறானா?

கதிர் டூத் பேஸ்ட் மாடல் போல பற்கள் தெரிய சின்ன சிரிப்புடன் இருந்தான். அவனிடம் வேறு எதையும் அவளால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

“தேங்க்ஸ். ஆனா இப்போ வேண்டாம். தேவைப்பட்டா அப்புறமா படிச்சுக்குறேன்” – சொன்னதோடு அங்கே நிற்காமல் சமையல் அறை பக்கம் சென்றாள் அமுதவள்ளி.

சமையல் அறை உள்ளே செல்லும் முன் திரும்பி லிவிங் ரூமை பார்த்தாள். கதிர் புரியாத பாவனையுடன் பேப்பரை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அதற்கு மேலே நிற்காமல் அங்கிருந்து நகன்றாள் அமுதவள்ளி.

பேப்பர் பார்த்து அவளுக்கு தெரிய வேண்டிய இரண்டு விஷயங்களும் ஏற்கனவே தெரிந்து விட்டது!

ஆயுஷ் கம்பெனியை நிர்வகிக்க தொடங்கி விட்டான். அதேப்போல பிரணய் பற்றிய செய்தி நேரடியாக வராவிட்டாலும், பிரணய்க்கு உடல்நிலை சரி இல்லாததால் அவனுடைய கம்பெனிக்கு தற்காலிகமாக வேறு ஒருவர் ஸி.ஈ.ஒ ஆக இருப்பார் என்ற செய்தி ஏற்கனவே வெளி வந்திருந்தது. அதுவே அமுதவள்ளிக்கு தெரிய வேண்டிய செய்தியை கொடுத்திருந்தது.

இதற்கு மேல் அவள் அந்த செய்திகளை தேடி படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அது எல்லாமே அவளுடைய இறந்த காலத்தை சேர்ந்தது. எதிர் காலத்திற்கு தேவை இல்லாதது.

அத்துடன் செய்திகள் பற்றிய யோசனையை விட்டு விட்டு தன் வேலைகளில் கவனத்தை செலுத்த தொடங்கினாள்.

---யு---ஷ், அ---மு—த--வள்ளி எங்கே?” – தட்டுத் தடுமாறி கேள்வி கேட்ட பிரணயை புரியாமல் பார்த்தான் ஆயுஷ்.

“இந்த கேள்விக்கு நீங்க பதில் சொல்வீங்கன்னு இவ்வளவு நாளா காத்துட்டு இருக்கேன் பிரணய். அம்மு எங்கே? அவ அன்னைக்கு உங்களை பார்க்க தானே வந்தா? உங்களுக்கு எப்படி

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Theriyuma ungalukkuTheriyuma ungalukku
  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Mathiyoor mysteries - 01 - Unnai kan thedutheMathiyoor mysteries - 01 - Unnai kan theduthe
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Vetri yin selviVetri yin selvi

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 15 - Chillzee StoryAdharvJo 2021-03-25 20:28
Uyriukku poradikittu....yen uyir-nu dialogue viduraru....inga ivaru silent ah pudhu track start panitaru pole 😍😍😍😍 kadhirrr sir konjam usara irunga...She is Ms Amudhavalli :yes: jakardhai!!!😜 aunty green signal koduthachi :dance: look forward to read the next update.
Interesting update ma'am 👏👏👏👏👏
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 15 - Chillzee Storymadhumathi9 2021-03-23 10:02
:clap: nice & cute epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 15 - Chillzee StorySaraniya 2021-03-23 07:04
Nice episode ma'am :hatsoff: . Pranai kum amutha kum Idaiyila enna nadanthathu :Q: . Waiting for next episode ma'am :-)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 15 - Chillzee StoryArunaa 2021-03-22 22:21
Appo Kadir Shaan herovaa Pranai illaha
Nice update..
Reply | Reply with quote | Quote
# Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 15 - Chillzee StoryVinoudayan 2021-03-22 22:19
Nice epi sis👏👏 pranav and kathir yaaru amutha ku pair :Q: eagerly waiting for next update (y)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 15 - Chillzee StoryRiswin 2021-03-22 22:05
Paarah.. Kathir loves vanthurichi pole 💕💕💕... Ammu ku pair Kathir ah pranaiy ah??.. Interesting episode 👏👏👍👍.. Waiting for next episode..
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top