(Reading time: 11 - 21 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

ராதிகாவிற்கு. 

       “அய்யோ!...கேட்கிற எனக்கே இவ்வளவு பயமாயிருக்கே...அந்த இடத்திலேயே இருந்த உனக்கு எப்படி இருந்திருக்கும்?”

       “இப்ப நினைச்சாக் கூட மேலெல்லாம் புல்லரிக்கும் ராதிகா!...விடிய விடிய அப்படியே கிடந்தவன்...அதிகாலை நேரத்துல தெருவில் பால்காரன் சைக்கிள் பெல் சத்தம் கேட்டதும் அந்த தைரியத்துல இறங்கி கீழே ஓடி வந்தேன் எதிர்த்தாப்புல எங்கம்மா பால் வாங்க எழுந்து வந்தாங்க

       “ஏண்டா      ராத்திரி பூராவும் மொட்டை மாடியிலேயா இருந்தே?” என்று என்னைப் பார்த்துக் கேட்டவாறே பால்காரனிடம் அவர் சென்று விட ஒரே ஓட்டமாய் ஓடிப் போய் வீட்டுக்குள்ளார என்னோட மெத்தையில் விழுந்தேன்

       “அப்போதிருந்துதான் உங்களுக்கு இந்தப் பேய் புராஜக்ட்ல ஆர்வம் வந்திச்சா?” ராதிகா கேட்டாள்.

       “அட நீ வேற...எனக்கு அப்பக் கூட அது பேய்ன்னு தோணலை!...எங்கம்மாகிட்ட அடுத்த நாள் மதியம் முந்திய இரவு நடந்ததைச் சொன்னப்ப...அவங்கதான் சொன்னாங்க...அதெல்லாம் பேயோட வேலைன்னு...

       “உடனே நடுங்கி இருப்பீங்களே?” ராதிகா கிண்டலாய்ச் சிரித்தவாறே சொன்னாள்.

       “அதான் இல்லை!...அந்த நிமிடத்தில் இருந்துதான் எனக்கு இந்தப் பேய்...பிசாசுக மேலே ஒரு ஈர்ப்பே வந்திச்சு!...யாருக்குமே புரியாத புதிரா இருக்கற அந்த விஷயத்தை பெரியவன் ஆனதும் ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடிக்கணும் என்கிற எண்ணம் அப்போதிருந்தே என் மூளையில் முளை விட ஆரம்பிச்சிடுச்சு!...அதே மாதிரி பெரியவன் ஆனதும்...எங்கெங்கே பேய் சம்மந்தப்பட்ட அட்வென்சர்ஸ் கிடக்குதோ அங்கெல்லாம் நானே வலியப் போய்...ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன்!...யாருமே டிரை பண்ணாத முறைல பேயையும்...கம்ப்யூட்டரை இணைச்சு புராஜெக்ட் பண்ண ஆரம்பிச்சேன்...இப்பவும் அதுக்காகத்தான் அந்தக் காப்ம்ளக்ஸுக்குப் போறேன்!

       அப்போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு பெரியவர் முகிலனைப் பார்த்ததும் முகம் பேயறைந்த்து போலாகி வேக வேகமாக நடந்து செல்ல

       “என்ன முகில்...அவருக்கு ஏதாவது கடன் கொடுத்திருக்கியா?...உன்னைப் பார்த்ததும் எங்கே நீ பணத்தைத் திருப்பிக் கேட்டுடுவியோ?ன்னு பயந்து ஓடுறார் போலிருக்கு!சொல்லி விட்டு ராதிகா சிரிக்க

       “அவர் அதுக்காக என்னைப் பார்த்தீடு ஓடலை...இது வேற!...இவரோட பேமைப் பேச்சை நீ கேட்டிருக்கியா?...சும்மா அனல் பறக்கும்...ஆனா....

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.