(Reading time: 11 - 21 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

       எங்களுக்கான பஸ் புறப்படத் தயாராக நின்று கொண்டிருக்க ஓடிப் போய் ஏறிக் கொண்டோம்.

       பஸ்ஸில் கூட்டம் சற்றுக் குறைவாகவே இருக்க இருவருக்கும் இடம் கிடைத்து  அமர்ந்தோம்.  குனிந்து பாக்கெட்டில் கை விட்டு சில்லரை எடுக்கும் போது  'சிவானந்தா காலனி ஒண்ணு குடுங்க….”

       எங்கோ கேட்ட குரலாய்த் தெரிய நிமிர்ந்து பார்த்தேன். எனக்கு முன் இருக்கையில் ஆம்பூர் அனலேந்தி.

       'ஓ..இவரும் இந்த பஸ்ஸில்தான் வருகிறாரா?”

       பஸ் வடகோவை மேம்பாலம்  நிறுத்தத்தில் நின்ற போது நான்கு ஜீன்ஸ் இளைஞர்கள் சத்தமாய்ப் பேசிச் சிரித்தபடியே பஸ்ஸில் ஏறினர்.

       பஸ்ஸிற்குள் இப்போது சிகரெட் வாடை.

       எங்கள் இருக்கைக்கு அருகில் வந்து சாய்ந்தபடி நின்று கொண்டு அவ்வப்போது அஞ்சலியை அவர்கள் பார்வையால் தீண்ட நான் முறைக்க ஆரம்பித்தேன்.

       'மச்சி….இப்பெல்லாம்மயிலுகசெக்யூரிட்டியோடவே..வருதுகப்பாகாதில்  கடுக்கன்  அணிந்தவன்  சொல்ல

       'நீ  ஏனப்பா அதக் கண்டுக்கறே?….நமக்கு மயிலுகதான் முக்கியம்அத்த  மட்டும்  பாப்பியாஅத்த  விட்டுட்டு…”

       'மச்சிஇங்கொரு செவப்பு மயிலுஎப்படி செழிப்பாயிருக்கு கண்டுக்கினியா?”

       அஞ்சலி சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.

       'செழிப்பிற்குக்  காரணமான  விவசாயி  கூடவே  வரானே

       நான் பற்களை 'நறநற' வென்று கடித்தேன்.

       'மச்சிஉனுக்கு செம்மயிலு பிடிக்குமா?..செம்மீனு பிடிக்குமா?”

       என் நரம்புகள் முறுக்கேற 'ராஸ்கல்….ஓங்கி அறைஞ்சேன்னாஉம்மூஞ்சிசெம்மூஞ்சி ஆய்டும்ஆவேசமாய்க் கத்தினேன்.

       பஸ்ஸிலிருந்த அனைவரும் என்னைத் திரும்பிப் பார்த்தனர். ஆம்பூர் அனலேந்தி உட்பட.

       ஆனால் யாரிடமும் எவ்வித ரீயாக்ஷனும் இல்லை. 'நமக்கென்ன?”என்கிற பாணியில் அவர்களனைவரும் மீண்டும் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கையில் மூழ்கியது என்னை வியப்பிலாழ்த்தியது.

       'மச்சிவிவசாயி  கூவுறானே?”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.