(Reading time: 11 - 21 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

       “என்ன...ஆனா?”ன்னு இழுக்கறே சொல்லுஎன்றாள் அவள்.

       “ராதிகா...பொதுவாகவே இலக்கியக் கூட்டங்கள் என்றாலே எனக்கு அலர்ஜி.  எப்போதோ ஒரு முறை தெரியாத்தனமா நண்பர் ஒருவரின் வற்பறுத்தலுக்காகச் சென்று கவிதை என்ற பெயரில் சில கன்னாபின்னாக்களையும்தத்துவம் என்ற பெயரில் சில தத்துப்பித்துக்களையும் கேட்டு….மனம் நொந்து….நெடுநாள் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்துஏதோ இப்போதுதான் கொஞ்சமாய்த் தேறிபழைய நிலைமைக்கு வந்திருந்தேன்...”.

        “இந்த நேரத்தில் எனக்கு மாபெரும் சோதனை என் அக்கா மகள் அஞ்சலி மூலமாக வந்தது.

       'மாமாஇந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நீங்க ப்ரீதானே?”

       'ஏம்மா எதுக்குக் கேட்கறே?”

       'அன்னிக்கு ஆர்.எஸ்.புரம்  நகரத்தார் சங்க கட்டிடத்துல ஒரு இலக்கியக் கூட்டம் நடக்குதுப்பாஅதுக்கு நான் கண்டிப்பா போயாகணும்….நீங்களும் கூட வர்றீங்க

       எனக்கு பகீரென்றது.  'என்னது….இலக்கியக் கூட்டமா?…நானா?…அம்மா தாயேஎன்னை ஆளை விடுநம்மால் ஆகாது

       'அப்புறம்நான் எப்படி மாமா  தனியாப் போறது?”

       'உங்கம்மாவைக் கூட்டிட்டுப் போ…”

       'அது சரிஎனக்காவது ஓரளவுக்கு டவுன் பஸ் பழக்கமிருக்குஅம்மாவுக்கு எந்த நெம்பர்எங்க போகும்னே தெரியாதுஅதைக் கூட்டிட்டுப் போகச் சொல்றீங்களே…” சிணுங்கிளாள் அஞ்சலி.

       'அம்மாடிவேண்டாம்மா தயி!வேற என்ன வேணாலும் செய்யச் சொல்லுசெய்யறேன்இலக்கியக் கூட்டம் மட்டும் வேண்டாம்மா..கெஞ்சினேன் நான்.

       அவள் பிடிவாதமும் என் மறுப்பும் கடுமையாக மோதியதில் அவள் பிடிவாதமே வெல்ல நான் பலியாடானேன்.

       ஞாயிற்றுக் கிழமை.

       ஓன்பது மணி நிகழ்ச்சிக்கு காலை எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி டவுன் பஸ்ஸைப் பிடித்து ஒன்பதே காலுக்கு நாங்கள் போய்ச் சேர்ந்த போது அரங்கினுள் எண்ணி நாலே பேர்தான் இருந்தனர்;

       'சார்நிகழ்ச்சிஇருக்கல்ல?” சந்தேகப்பட்டு ஒருவரிடம் கேட்டேன்.

       'இருக்குஇருக்குஎப்படியும்பத்து பத்தரைக்கு ஆரம்பிச்சிடுவாங்க

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.