வயசாச்சாம், ஏன் இன்னும் கல்யாணம் செய்யலைன்னு கேட்டா” – கதிர் முழித்த முழியைப் பார்த்து பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு சிரித்தார் பானுமதி.
“சிரிக்காதீங்கம்மா. எவ்வளவு இருக்கனும் அவளுக்கு? என் விஷயத்துல அவ யாரு தலைப் போடுறதுக்கு? நீங்க எதுக்கு இதை எல்லாம் அனுமதிக்குறீங்க?”
“முதல்ல எனக்குப் பிடிச்ச மாதிரி ப்ரோபைல் இருக்கான்னு கண்டுப்பிடிக்க சொல்லி இருக்கேன். எப்படியும் நான் செய்ய வேண்டிய வேலை தானே கதிர் இது?”
“இப்போ இப்படி அவசர அவசரமா பார்க்க வேண்டாம்ன்னு சொன்னேன்ம்மா. அதும் அவ ஒன்னும் தேட வேண்டாம்”
“இருக்கட்டும் கதிர். அமுதா தேடிக் கண்டுப்பிடிச்சு நல்ல விதமா பொண்ணு அமைஞ்சா நல்லது தானே? அதும் ஓய்வா இருக்க நேரத்துல தான் செய்றா. செய்யட்டுமே! எனக்கு பிடிச்சா மட்டும் தான் உன் கிட்ட வந்து பேசுவேன். அதனால நீ யோசிக்க ஒன்னும் கிடையாது.” – பானுமதி பொறுமையாக விளக்கம் கொடுத்தார்.
கோபமாக பேச தொடங்கிய கதிர், கடைசி வினாடியில் மனதை மாற்றிக் கொண்டவனாக வாயை மூடிக் கொண்டான்.
பானுமதி என்ன என்று கேட்காமல் மகனை அமைதியாக கவனித்தார்.
ஒன்றிரண்டு வினாடிகள் குழப்பத்துடன் நின்றான் கதிர். இருந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டான்.
“சரிம்மா, இதை பத்தி அப்புறமா பேசுவோம். எனக்கு ஒரு முக்கியமான போன் பண்ண வேண்டி இருக்கு.” – சொல்லி விட்டு நிற்காமல் நடந்து சென்றான்.
பானுமதியும் அதற்கு மேலே அங்கேயே இருக்கவில்லை. அமுதா பக்கம் சென்று அமர்ந்தார்.
“எவ்வளவு நேரம் இதையே பார்த்துட்டு இருப்ப அமுதா? போதும் வா, சும்மா நடந்துட்டு வரலாம்” – பானுமதி.
“ரெண்டு நிமிஷம் கொடுங்க மேடம். இந்த ப்ரோபைல்ஸ் எல்லாத்தையும் பேவரைட் ஆக்கிட்டு வரேன்” – அமுதா இலகுவாக மவுஸ் உதவியுடன் மேட்ரிமோனியல் பக்கங்களை பிரவுஸ் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பானுமதி.
சொன்னதுப் போலவே இரண்டே நிமிடங்களில் ஒவ்வொரு பிரவுசர் பக்கமாக மூடி வைத்த அமுதவள்ளி, வேலை முடிந்தது என்று சொல்பவளாக எழுந்து நின்றாள்.
“போலாமா மேடம்?”
“எவ்வளவு வேகமா எல்லாத்தையும் செய்ற? கம்ப்யூட்டர்ல வேலை செய்திருக்கீயோ?” – பானுமதி கேள்விக் கேட்டுக் கொண்டே பொறுமையாக எழுந்தார்.
“செய்திருக்கேன் மேடம்” – மேலோட்டமாக பொதுபடையாக பதில் சொல்லி விட்டு
Irundhalum Amudhavalli ivalo theeya match matiking la irangi irukka kudadhu 😜 aunty semma sweet 😍😍 cool update ma'am 👏👏👏👏👏 kadhir oda roja ena anadhu nu parka waiting.
Thank you.
Pranaiy ah vida Kathir better.. Pranaiy mari betrayal pannala.
I think ammu Kathir oda proposal ah accept panna matanga.. 🤔🤔
Kathir ku Ammu oda old days pathi teriya varuma??
Ila pranaiy again vanthuruvarah...
First is the best love illaiya..
Ammu Ena seiya poranga..??
Another chillze story episodes lam Epom varum??
Waiting for next episode.... 🙂🙂