(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அப்போது ஜாஃபரும் அஜயும் அங்கு வந்தார்கள், நிக்கத், 'அல்லாஹ், நல்ல காலத்துக்கு வந்துட்டாங்கன்னு ' நினைத்தார்.

"நிக்கத் வேலையெல்லாம் முடிஞ்சுது, கிளம்பலாமா? தங்கச்சி ஊருக்கு போறோம் உடனே கிளம்பனும் , சென்னைக்கு வந்ததும் உடனே எனக்கு ஃபோன் செய்யுங்க, கிளம்பலாமா நிக்கத்?"

"கிளம்பலாங்க, நாங்க போயிட்டு வரோம் அக்கா, சீக்கிரம் ஊருக்கு வந்துடுங்க அங்க பார்க்கலாம். "

"சரிங்க அண்ணி!"

"நானும் போயிட்டு வரேன் ஆண்ட்டி!" அஜய் கூறினான்.

"அஜய் தம்பி நீ டாக்டர் ஆனதும் எனக்கு நீதான் டாக்டர், சீக்கிரமே படிப்பை முடி! " என்றார்.

"தாங்க்ஸ் ஆண்ட்டி இப்பவே எனக்கு முதல் பேஷண்ட் கிடைச்சாச்சு..... ஆனா அதுக்காக உங்களுக்கு ஒரு உடம்பும் வரக்கூடாது , அதுக்கு சீக்கிரமே ஒரு மருந்தை படிச்சு தெரிஞ்சு வச்சுக்கறேன். "

"நல்லது அந்த கடவுள் ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு, நல்லபடி போயிட்டு வா! "

சரி கிளம்பலாம் "ஜாஃபர் கூறவும் உடனே எல்லோரும் காரில் ஏறினார்கள்.

"தனம் எங்க அவ வரலையே?" நிக்கத்தான் கேட்டார் .

"போச்சே ஏத்திக்கலாம் , அந்த பசங்களோட பேசிண்டிருக்காமா அதான் நாங்க உன்ன கூட்டிட்டு போலாம்னு வந்தோம். "

"சரிங்க! "

இவர்கள் கிளம்பி வரும்போது வழியில், எதிரே வந்த காரை பார்த்து நின்றார்கள். அதிலிருந்து தனம் இறங்கி இவர்கள் காரில் ஏறிக் கொண்டாள்,  அவர்கள் வீட்டுக்கு சென்றார்கள் .

அவர்கள் வீட்டில் இறங்கி கொண்டு உள்ளே போன போது அங்கே அவள் அம்மா எல்லாம் ரெடியாக வைத்திருந்தார். "சாப்பிடலாமாம்மா? டைம் ஆயிடுத்து கிளம்பனும் !" தனம் தான் கேட்டாள்.

அவர்கள் எல்லோரும் ரெஜிஸ்டர் ஆபிசுக்கு போனவுடன் அம்மா அப்பா தங்கைகள் எல்லோரும் தனம் மாறிவிட்டது பற்றியும், இப்ப வந்திருக்கிற ஜாஃபர் நிக்கத் இருவருக்கும் கொடுக்கும் மரியாதை அவர்கள் பணக்காரர் என்பதால்தான் என்று பேசிக் கொண்டார்கள். தங்களை கொஞ்சம்கூட மதிக்கவே இல்லையென்றும், தனம் இவ்வளவு பெரிய மகனை கூட்டிக் கொண்டு ஊரெல்லாம் திரிஞ்சு இவர்களின் மானத்தை வாங்குவதாகவும் பேசிக் கொண்டார்கள்.

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.