(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

சொல்லுங்க நான் இப்போ வெளியே போய் அவங்களோட சேர்ந்து சாப்பிடறேன். "

அவங்களுக்கு பேசிக் கொள்ள டைம் கொடுத்துவிட்டு வெளியே சென்றாள்.

அங்கே எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்களோடு தட்டை எடுத்து யார் போடுவதற்கும் எதிர்பார்க்காமல் தானே எடுத்து போட்டுக் கொண்டு உட்காந்தாள். வள்ளி தான் ஏன் இவள் எதையுமே பேசாமல் உட்கார்ந்திருக்கிறாள், என்று பொறுக்காமல்,

"அக்கா, அம்மா அப்பாகிட்ட என்ன பேசின? அது என்ன ரகசியம்? நாங்க கூட அவங்க மகங்க தான்."

"அது, அவங்க உங்ககிட்ட சொல்வாங்க!"

'அப்ப எதுக்கு ரகசியமா பேசற எங்களையும் வச்சு பேசறதுதான?"

தனம் பதில் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

நிக்கத் இவர்கள் பேச்சையே கவனித்துக் கொண்டிருந்தார், பாவம் பெண்களுக்கு கல்யாணம் ஆனா சரியாயிடுவாங்க.' என்று நினைத்துக்கொண்டார்

"என்ன பதில் சொல்ல மாட்டேங்கற? எங்களை பார்த்தா அவ்வளவு அலட்சியம், ஏன்னா நாங்க பணக்காரங்க இல்ல இல்ல ? அதான அவ்வளவு அலட்சியம் ?"

தனம் சடக் என்று ஒரு பார்வை பார்த்தாள் அவள் தங்கையை, பிறகு திரும்பி சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு  முடிக்கும்போது அவள் அம்மாவும் அப்பாவும் ரூமை விட்டு வெளியே வந்தார்கள் .

தனம் தட்டை எடுத்துக் கொண்டு அலம்ப போனாள், அவள் அம்மாவும் பின்னாடியே சென்று,

"அம்மா தனம் நீ ஏன்மா உன் தங்கச்சிகளுக்கு, நீயே செலவு பண்ண கூடாதா? இந்த வீட்டை வாங்கிட்டுத்தான் செலவு பண்ணனுமா?"

"ஏம்மா நான் சொன்னது புரிஞ்சுதா, புரியலையா?  இந்த பொண்ணுங்கள யாரும் சொத்துக்காக கல்யாணம் செய்துக்க கூடாது, அது மட்டுமில்ல அக்கா கிட்ட பணமிருக்குன்னு அடிக்கடி வந்து நிக்க கூடாது. அவங்கவங்க கால்ல அவங்கவங்க நிக்கனும். அவங்களுக்கு தையல் தெரியும், அத வச்சு தொழில் செய்ஞ்சு முன்னேற வழி பண்ணலாம்.

உங்ககிட்ட ஒண்ணுமே இல்லேன்னா கண்டிப்பா நான் உங்களுக்காக செய்ஞ்சிருப்பேன். ஆனா உங்களுக்கு வீடு இருக்கு ஆனா பணமில்லை அதான் உங்களுக்காக இந்த வீட்டை வெளியே விக்கவேணாம்னு நானே வாங்கிக்கறேன்னு சொன்னேன். இது அத்தனையும் உங்க மரியாதைய காப்பாத்தறதுக்காக, நீங்க மரியாதையோடு யாரோட உதவியும் நாடாம உங்க தயவிலேயே நீங்க உங்க பெண்களுக்கு கல்யாணம் பண்ணலாம், உங்க பிற்காலத்துக்கும் சேர்த்து வைக்கலாம், சுய கவுரவுத்துக்காக சொல்றேன், கேட்டா கேளுங்க!"

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.