(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

எல்லாம் பேசி முடிவாயிற்று.

"நல்லது தனம்மா, நீங்க உடனே ஆரம்பிச்சுடலாம், இங்கே எல்லாம் ரெடியாயிடும், ஆனா விக்கறதுக்கு என்ன ஏற்பாடு செய்ய போறே ?" என்று வினவினார், ஜாஃபர்.

"ஏதோ ஒன்னு யோசிச்சு வச்சிருக்கேன், அது நான் பேசிட்டு சொல்றேன்!" தனம் மனதில் ஒரு திட்டம் வகுத்திருந்தாள்.

அவர்களை ரெஜிஸ்டர் ஆபிஸ் உள்ளே கையெழுத்துப் போட,  வர சொன்னார்கள். எல்லோரும் உள்ளே சென்று கையெழுத்துப் போட்டு விட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் கை கொடுத்து வாழ்த்திக் கொண்டார்கள்.

"சரி தனுஷூ நாங்க கிளம்பறோம், இன்னிக்கே நாங்க ஊருக்கு போறோம். பிறகு நீ சென்னைக்கு வந்ததும் எனக்கு போன் பண்ணு நாங்க வந்து பாக்கறோம்!"

"ஏன் ஜாஃபர்? இன்னும் ஒரு நாள் இங்கேயே இரேன்,  நம்ம வீட்ல வந்து தங்கிட்டு போயேன், என்ன கமலம் சொல்லேன் உன் அண்ணன்கிட்ட."

"ஆமாம் அண்ணா இருந்துட்டு போலாமே, என்ன அண்ணி இருந்துட்டு போங்கண்ணி!"

"இல்ல அக்கா போயே ஆகணும், பிள்ளைங்க கஷ்ட படுவாங்க, உங்களையும் பார்த்துட்டு, அப்படியே இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யலாம்னு வந்தோம்.  இன்னிக்கே போயாகணும் அக்கா! "

"சரி அப்ப சென்னைல பார்க்கலாம், ஆமாம் உனக்கு எப்படி அண்ணி இந்த தனத்தை தெரியும், இவ்ளோ நெருக்கமா இருக்கீங்க? இந்த அஜய் நம்ம ஜாபர் அண்ணன்

ஜாடைல இருக்கு  இல்ல, அண்ணி?

ஏதாவது உறவா அண்ணி அண்ணா மதம் வேறயாச்சே ? ஏன் அண்ணி ஏதாவது சொல்லலான்னா சொல்லுங்க அண்ணி." கமலம்மா  தனியாக யாரும் இல்லாத போது, நிக்கத்திடம் கேட்டார்.

" ஜாபர் போலவா இருக்கான் அஜய், அட எனக்கு தெரியலையே, நீங்க தான் சொல்றீங்கக்கா. தனம், அஜய் ரெண்டுபேருமே எனக்கு ரொம்ப செல்லம், அவங்களுக்குன்னு யாருமே இல்லையே அதான் நானும் ஜாஃபரும் அவங்களுக்கு அப்பா அம்மாவா இருந்து எல்லா உதவியும் செய்யறோம் அவ்வளவுதான் வேறொண்ணுமில்ல."

"ஏதாவது தப்பா கேட்டிருந்தா மன்னிச்சுக்கோங்கோ அண்ணி...ஏதோ மனசுல பட்டத்தை கேட்டுட்டேன் அவளவுதான். "

"ஐயோ தப்பே இல்ல அக்கா, நாம என்ன இன்னிக்கு நேத்தா பழகறோம்? பரவாயில்லக்கா." நிக்கத்துக்கு தெரியும் கிராமத்து மக்களுக்கு வெள்ளை மனது உள்ளே ஒன்று வெளிய ஒன்று வச்சு பேசத் தெரியாது, மனசுல பட்டத  அப்படியே சொல்லிடுவாங்க.

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.