(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

வாப்பாவை அவனிடம் சேர்த்த்துடுங்க அல்லா என் துவாவை ஏத்துக்கங்க ' என்று அழுதுக் கொண்டே வேண்டினார் ஜாஃபர்.

பாட்டில்ல இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்து, அதை நல்லா துடைத்து கொண்டு இறங்கி வீட்டின் உள்ளே சென்றார், உள்ளே சென்றதும் நிக்கத் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார், அவர் முகம் வருத்தத்துடனிருந்தது, அவர் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது ஜாபருக்கு... தன் முகத்தை பார்த்தால் புரிந்துக் கொள்வாள் தன் மனைவி என்று அவருக்கு தெரியும் அதனால் தன் முகத்தை திருப்பி தனத்தின் அப்பாவிடம் பேச்சு கொடுத்தார், நிக்கத்துக்கும் அவர் செயல் புரிந்தது.

அஜய் வந்தான், "மாஸ்டர் வாங்க டிபன் ரெடி சாப்பிடலாம் வாங்க!" என்று கூப்பிட்டான்.

"அஜய் இங்க வா! " என்று தன் அருகில் அழைத்து,  அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டார். அவனுக்கும் புரிந்தது, அவன் தன்னை நொந்துக் கொண்டான் 'தன் வேதனையை ஏன் அவரிடம் கொட்டி அவரை வேதனை பட வைத்தான் .'  "மாஸ்டர் சாரி, உங்கள வேதன பட வச்சுட்டேன், என்ன மன்னிச்சுடுங்க"

"இல்ல அஜய், உனக்காக நான் இருக்கேன், நல்லதோ வருத்தமோ வேதனையோ கஷ்டமோ எல்லாத்தையும் என்னிடம் கொட்டிடுப்பா , எனக்கு நீ தான் முக்கியம், நான் இருக்கேன் ராஜா உன்னோட கவலை எல்லாம் கொட்டு ராஜா! "

"இல்ல மாஸ்டர், இனி எந்த பிரச்சனையும் இல்ல இப்போ நான் க்ளியரா இருக்கேன் "என்று அவனும் அவரை இறுக்கமாக அணைத்தான், என்ன புண்ணியம் என் பெற்றவங்களோ நானோ பண்ணோம்னு தெரியல உங்கள என் வாழ்க்கையில அனுப்பியிருக்கார் அந்த கடவுள். ரொம்ப தாங்க்ஸ் மாஸ்டர்! "

"என்ன ராஜா தாங்க்ஸ் எல்லாம் சொல்லிண்டு, நான் உன் தாத்தான்னு ஏற்கனவே சொன்னேன் நீதான் என்ன யாரோ மாதிரி பார்க்கற. "

“இல்ல மாஸ்டர் உங்கள என்ன தூக்கி வளரத்த மாஸ்டர் நினைப்பிலதான் உங்களையும் மாஸ்டர்ன்னு கூப்பட்றேன், நீங்களும் என்ன தூக்கி விட்ருக்கீங்க மாஸ்டர், அதான் உங்கள நான் மாஸ்டர்னே கூப்பிடறேன்.”

“ சரி தங்கம் உனக்கு எப்படி தோன்றதோ அப்படியே கூப்பிடு” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

அவர்கள் எல்லோரும் ஒன்றாக டிபன் சாப்பிட்டனர்.

“கிளம்பலாமா தனம்மா? நாம தனுஷ்கோடி வீட்டுக்கு போகனும், பிறகு அங்கிருந்து ரிஜிஸ்டர் ஆபீஸ் போகனும்மா.”

“ ரெடி அங்கிள் போலாம், அம்மா அப்பா போய்டு வறோம், நீங்க உங்க பாக் எல்லாம் ரெடி

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.