(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"நல்லா இருக்கேன் பாட்டிம்மா, எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு நீங்க இங்க வந்தது. " என்று நிக்கத்தை, அனைத்து கொண்டான்.

"வாங்க அங்கிள் உள்ள வாங்க ஆன்டி" என்று தனம் அவர்களை கூட்டிக் கொண்டு சென்றாள்.

"அங்கிள் இந்த வீடு எப்படி தெரிந்தது உங்களுக்கு?" என்று தனம் கேட்க, சட்டென்று நின்று விட்டார் நிக்கத்.  ஜாபரும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அது ஒன்னுமில்லம்மா, செல்வத்தை  போன்ல கேட்டேன் அவன் சொன்னான்மா ."

"அப்படியா?"

உள்ளே வந்தவர்களை தனம், தன் அம்மா அப்பாவை அறிமுகப் படுத்தினாள், "வணக்கம்மா! வணக்கம் ஐயா! எப்படியிருக்கீங்க?" என்றார் ஜாபர்

நிக்கத்தும் "வணக்கம்மா, ஐயா வணக்கம்"' என்று இரண்டு பேரையும் பார்த்து கை கூப்பினாள்.

"சென்னைக்கு வாரீங்களாமே? வாங்க நாங்கல்லாம் இருக்கோம் நல்லா பார்த்துக்கறோம். "

"என் ரெண்டு பொண்ணுங்களுக்கு வரன் பார்க்கறோம், வந்த வரன்களெல்லாம் எவ்ளோ செய்வீங்க, எவ்ளோ நகை போடுங்க ஸ்கூட்டர் வாங்கி கொடுங்க அது இதுன்னு பெரிய பட்ஜெட் போட்டு கொடுக்கறாங்க, என்ன பண்றது புரியல? இப்பதான் தனம் நீயும் சென்னைக்கு வந்துடும்மா, நான் தங்கச்சிகளுக்கு நல்ல வரன் பார்த்து செய்யலாம்னு சொன்னா, அதான் வரலாம்னு முடிவெடுத்தோம். "

"எங்க உங்க பொண்ணுங்கள காணோம்?"

"அவங்க சமையல் செய்ஞ்சுட்டிருக்காங்க!"

"அப்படியா, எனக்கு தெரிஞ்சவங்க வீட்டுல அண்ணன் தம்பி பெத்த பசங்க இருக்காங்க, இவங்களும் அக்கா தங்கச்சிங்க, நீங்க சரின்னு சொன்னா நான் பேசி பார்க்கறேங்க." என்றார் நிக்கத்.

"அது... அது வந்து அவங்க என்ன ஜாதிங்க ? எங்க மதமா, உங்க மதமா?" என்று கேட்டார் லக்ஷ்மி.

"உங்க மதம்மா, அவங்க உங்க ஜாதிதாம்மா, அவங்கள எனக்கு ரொம்ப வருஷமா தெரியும், நல்ல குடும்பம் , அவங்க பசங்களும் நல்ல பசங்கம்மா, நான் பார்த்து வளர்ந்த பசங்க  உங்களுக்கு சரின்னா நீங்க சென்னைக்கு வந்ததும் நான் போய் பேசறேன். "

தனத்துக்கு கோவம் அம்மா ஏன் ஜாதி மதம்ம்னு, ஏன் இப்படி இருக்காங்க , ஆனா இந்த சின்ன ஊர்ல வாழ்ந்தவங்க இப்படித்தான் இருப்பாங்க என்று மனதுக்குள் தானே பேசிக்கொண்டிருந்தாள் "என்னம்மா தனம் உன்னைத்தான்! " என்று நிக்கத் கூப்பிட்டார்

"ஆன்டி கூட்டீங்களா? "

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.