அதான் நானும் அப்படி சொன்னேன் "
"சரி வாட்ட்வர் இப்போ இந்த பிராபர்ட்டி ரெண்டு பேர் பேர்லயும் வாங்கனும் அதே மாதிரி இதுக்கப்புறமும் ஏதாவது பிராபர்ட்டி வாங்கறதா இருந்தா அது ரெண்டு பேர் பேர்லயும் தான் வாங்கனும், இனி பிரிவே கூடாது அவ்வளவுதான்."
"சரிப்பா நாளைக்கே உனக்கு கல்யாணம் ஆனா அப்போ எல்லாம் மாறித்தான் ஆகணும். "
'அப்போ பார்த்துக்கலாம், எனக்கு கல்யாணத்துக்கு இன்னும் ரொம்ப வருஷம் இருக்கு, அப்போ பார்த்துக்கலாம்," என்று தன் அம்மாவிடம் கூறிவிட்டு, தன் வாலெட்டிலிருந்து ஐ டி ப்ரூப் எடுத்து கொடுத்தான். " இது போருமாம்மா?"
"போட்டோ இருக்கா அஜய் ?"
"இருக்கும்மா, காலேஜுக்கு தேவைப்படும்மோன்னு இதெல்லாம் எடுத்து வச்சுண்டேன், இப்போ எவ்ளோ யூஸ் ஆகுது பார்."
"குட் , எப்பவும் இதெல்லாம் வச்சுண்டா நல்லது எப்போ எது தேவைன்னு நமக்கே தெரியாது. என்கிட்டேயும் எல்லாம் இருக்கு ஆனா எல்லாம் காபிஸ், ஒரிஜினல் எதுவும் இல்லை, எங்கே தொலைச்சுடுவோமோ என்று ஒரிஜினல்ஸ் வச்சுக்கல." என்று அவனிடம் பேசிக் கொண்டே தன்னோட ஐடி ப்ரூஃப் எல்லாம் எடுத்து வைத்து சரி பார்த்தாள். அவளும் எப்பவும் போட்டோஸ் கூட வைத்துக் கொண்டிருப்பாள், அதையும் தேடி எடுத்து எல்லாம் ஒன்றாக வைத்துக் கொண்டாள்.
வாசலில் கார் ஒன்று வந்தது, யார் என்று உட்கார்ந்த இடத்திலிருந்து பார்த்தாள், அது நிக்கத் ஆண்ட்டி கார் ஆச்சே? என்று யோசித்துக் கொண்டே எழுந்தாள்.
அப்போது அஜயும் எழுந்தான், அம்மா பாட்டிம்மா வராங்க, என்று வெளியே போனான், இவளும் பின்னாடியே போனாள் .
ஜாபரும், நிக்கத்தும் உள்ளே நுழைந்தார்கள், " ஆன்டி! அங்கிள்! " என்று அவர்களிடம் சென்றாள். அவளுக்கு ஆச்சர்யம் ஒரு பக்கமென்றால் சந்தோஷம் மறுபக்கம் "வாங்க அங்கிள், வர முதியாதுன்னீங்க?"
"எங்கே என்னோட ஹோம் மினிஸ்டர் ஆர்டர் போட்டுட்டாங்கம்மா, என் குழந்தைகளை பார்க்கனும், எனக்கு இப்பவே போகணும்னா அதான் வந்துட்டேன். ரிக்கார்டிங்க கான்சல் பண்ணிட்டேன், இங்க வந்துட்டேன். " என்றார்.
"பாரு தனம், உங்க அங்கிள் எவ்ளோ பயப்படறாரு என்கிட்ட , இவர் ம்யூசிக் டைரக்டருக்கு பதிலா ஆக்டரா போயிருக்கலாமில்ல தனம்?"
"என் ராஜா.... அஜய்
எப்படிடா தங்கம் இருக்க ?"