"சரிம்மா, அப்போ பத்தரம் உங்க பேர்ல பண்ணிடலாமா?"
"இல்ல ஐயா, அஜய் பேர்ல தான் பத்தரம் ரெடி பண்ணனும்."
"அம்மா!" என்று கூப்பிட்டான் அஜய்
"ஒரு நிமிஷம் ஐயா, அஜய் ஏதோ சொல்லனும்றான்."
'சரிம்மா!"
"என்ன அஜய்?"
"அம்மா எல்லாம் உன் பேர்ல தான் இருக்கணும், உன் பேர்லியே வாங்கிடும்மா!"
"இல்ல அஜய், உன் பேர்ல தான் வாங்கணும், அங்கிள் உன் பணத்துலேர்ந்து உன் பேர்லதான் சொல்லியிருக்கார்."
"அம்மா ப்ளீஸ் நீ நான் என்று பிரிக்காதே!"
"இல்லேன்னா நம்ம ரெண்டு பேர் பேரிலும் வாங்கிடு, என் பேர்ல மட்டும்னா இந்த டீல் வேணாம் .
"சும்மாயிரு அஜய், எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்."
"அம்மா ப்ளீஸ் ஒரு தடவை என் பேச்சு கேளேன் ."
"இல்லப்பா அஜய் நான் பார்த்துக்கறேன். "
"இல்லம்மா ரெண்டு பேர் பேர்லயும் இல்லேன்னா இந்த பிராபர்டியை வாங்க வேணாம் , மை பைனல் டிசிஷன்! "
"ஐயோ அஜய்! உனக்கு இவ்வளவு கோவம் வருமா?ஏன் அஜய், ஏன் இவ்வளவு கோவம் சொல்லு?"
"எனக்கு கோவம்லாம் இல்ல, ஆனா ரெண்டு பேர் பேர்லயும் பிராபெர்ட்டி வாங்கணும், இல்லேன்னா வாங்கவே வேண்டாம். "
"சரி ரெண்டு பேர் பேர்லயும் வாங்கலாம், ஓகே?"
"சாரிம்மா, என் பணம் உன் பணம் உன் ப்ராபர்ட்டி என் ப்ராபர்ட்டி இதெல்லாம் வேண்டாம், சொன்னா கேள் இனி நாம ஒரே குடும்பம், இனி இந்த மாதிரி பிரிக்கறதெல்லாம் வேண்டாம் , ஏதோ போறாத காலம் நாம பிரிஞ்சு இருந்தோம்,
இன்னும் அப்பா நம்ம கூட சேரல, அதனால இனி எதுலயும் நமக்குள்ள பிரிவு வேண்டாம் , அதனால தான் இவ்ளோ பிடிவாதமா இருக்கேன். "
"சரிப்பா, நான் ஒரு பிராபர்ட்டி வாங்கியிருந்தா அதை உன் மேல தான் வாங்கியிருப்பேன், இதுல என்ன இருக்கு எல்லாருமே அவங்க பசங்களுக்காகத்தான் பிராபர்ட்டிஸ் வாங்குவாங்க,