(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"ஆமாம்மா அவங்க ரொம்ப நல்லவங்க, அவ்ளோ அன்னியோன்னியம் ஜாஃபர் அண்ணனும், நிக்கத் அண்ணியும். "

"ஆமாம் ஆன்டி! "

"சரி சாப்பிட்டு போலாம்! "என்றார் கமலம்மா.

"இல்லம்மா, எங்கம்மா வீட்டில வெயிட் பண்ணிட்டிருப்பாங்க , நாங்க சும்மா சுத்தி பார்க்கலாம்னு வந்தோம், அப்போதான் சரசுவ  பார்த்தோம் உங்க வீட்டுக்கு வந்துட்டோம்."

"சரிம்மா வீட்டை சுத்தி பார்த்துட்டு, பிறகு நிலத்தை பார்த்துட்டு பிறகு வீட்ல கொண்டு உட்டுட்றேன். "

"சரிங்க ஐயா!"

"இது யாரும்மா?" என்று கமலம்மா கேட்டார்.

"இது.. இது.."

"நான், அவங்க மகன்மா!"

"என்ன உனக்கு இவ்ளோ பெரிய மகனா? என்னப்பா படிக்கற?"

"நான் டாக்டருக்கு படிக்கறேன்ம்மா! "

"அட அவ்வளோ பெரியவனா, நல்லா படிப்பா, நல்லாயிரு!" என்று வாழ்த்தினார், கமலம்மா.

வீட்டை சுத்தி பார்த்தார்கள். அந்த கிராமத்து வாசனையும், சமையலறை மிக பெரியதாகவும் சகல வசதியாகவும் இருந்தது .

பெட்ரூமெல்லாம் பெரியதாகவும் அழகாகவும் இருந்தது .....வீடு ரொம்ப பெரியது, தோட்டம் ரொம்ப அழகாகவும் பெரியதாகவும் இருந்தது, இந்த வீட்டிலும் நிறைய காய்கறி பழங்கள் மரங்கள் இருந்தது தென்னை மரங்களும் இருந்தது.

 

"ரொம்ப அழகாக இருக்கு உங்க வீடு!" என்றாள் தனம்.

"ஆமாம்மா பழங்கால வீடு, பிள்ளைகலாம் வராங்கன்னு கொஞ்சம் வசதி பண்ணிண்டோம் ஏ சி ல்லாம் போட்டோம்."

"ஆமாம் பார்த்தேன் சகல வசதிகளோடுதான் இருக்கு! "

"சரி ஐயா, கிளம்பலாமா?' என்று கேட்டாள்.

"போலாம்மா! " என்றார் தனுஷ்கோடி.

"சரஸ்வதி உன்கிட்ட நான் அப்புறம் பேசறேன், வரட்டுமா?" என்று அவளிடமும் விடை பெற்று சென்றார்கள்.

நிலத்தை பார்த்து அதுவும் ரொம்ப பிடித்துவிட்டது.

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.