(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

சேர்த்தேன், உன்னால ஏன் பண்ண முடியாது?"

"தோட்டத்துக்கு எங்கே போவேன்?"

"சரி உனக்கு தோட்டம் இருக்கணும்னு இல்ல, தோட்டம் இருக்கவங்க கிட்ட பேசி வாங்க்கிக்கோ, அதை உனக்கு கொஞ்சம் லாபம் வச்சு வித்துக்கோ. நீயே அவங்க தோட்டத்துக்கு தண்ணி கொட்டி கிளீன் பண்ணி வச்சுக்கோ அவங்களுக்கும் சந்தோஷமாயிருக்கும். "

"அப்படி யாருடி கொடுப்பாங்க?"

"ஒன்னு செய் சரசு, எங்க குடும்பத்தை சென்னைக்கு கூட்டிட்டு போறேன். அங்கே தோட்டம் வாடறது எனக்கு கஷ்டமா இருக்கு, நீ பராமரிச்சுக்கோ, அங்கிருக்கற காய்கறி, பழத்தை நீ வித்து பணமாக்கிக்கோ பதிலுக்கு நீ அதை சுத்தமா வச்சுக்கணும், அப்பப்போ வீட்டுக்குள்ளேயும் சுத்தம் பண்ணி வச்சுக்கணும், என்ன சொல்ற?"

"ரொம்ப தாங்க்ஸ்டி , எங்கேயிருந்தோ கடவுள் மாதிரி வந்து எனக்கு தானா உதவற, உன்னோட தயாள குணமே குணம்டி!"

"இன்னும் உனக்கு நிறைய செய்வேன், உனக்கு ஒரு செல் போன் இருக்கா சொல்லு ?"

"இல்ல தனம், ஆனா இங்க ஊர் பெரியவர் வீட்ல இருக்கு அவங்க கிட்ட போன் பண்ணி சொல்லிட்டியான அவங்க ஆள் கிட்ட சொல்லி அனுப்பிடுவாங்க! " என்று, "இரு நம்பரை வாங்கித்தரேன்" என்று கூறினாள் சரஸ்வதி.

"சரி சரஸ்வதி,  இந்த ஊரில் யாராவது நிலம் விக்கறாங்களா? நாங்க வாங்கலாம்னு இருக்கோம்!" என்றாள் தனம் கொஞ்ச நாள் முன்பு அவளும் அஜயும் நிலம் வாங்குவதை பற்றி பேசியது ஞாபகம் வந்தது, அதான் கேட்டு வைத்தாள்.

"ஐயோ இவ்வளவு லேட்டா கேக்கறியே, நான் இப்ப சொன்னேனே ஊர் பெரிய மனுஷங்க அவங்க பசங்க மூணு பேரும் வெளி நாட்ல இருக்காங்க, பசங்க ரெண்டு பேரும் இவங்கள அங்கேயே வந்திருக்க சொல்லியிருக்காங்க, அவங்க மகளுக்கும் மகன்களுக்கும் சென்னைல வீடு இருக்காம் அதான் இங்க இந்த நிலம் வீடு எல்லாத்தையும் வித்துட்டு அவங்க போக போறாங்க, நீ வேணா அவங்க நிலம் இந்த வீடு எல்லாத்தையும் நீயே வாங்கிட்டேன் "என்றாள் சரஸ்வதி .

"அஜயை நிமிர்ந்து பார்த்தாள் தனம் "பேசும்மா எவ்வளவுன்னு கேட்டு பார், எப்படியாவது மேனேஜ் பண்ணி வாங்கலாம், நான் மாஸ்டர்கிட்ட பேசறேன்! " என்றான் மகன்.

"சரி நான் பேசி பார்க்கறேன், நீயும் வா அவங்க கிட்ட பேசலாம். "

மூவரும் அவர்கள் வீட்டுக்கு சென்றார்கள். உள்ளே நுழைந்தாள் அங்கே நின்றிருந்த பெரிய வீட்டுக்காரம்மா, "வாம்மா சரசு, யாரிவங்க உன் சொந்தமா?"

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.