(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

தெரியவில்லை. நிறைய ஆட்டோவும் டாக்சியும் இருந்தது. அவள் டாக்சியிடம் சென்று,

"வெங்கடரமணா புறம் போகணும்..."

"போகலாம்மா, ஆனா வரதுக்கும் சேர்த்துதான் சார்ஜ் பண்ணுவோம். அங்கிருந்து சவாரியை கிடைக்காதும்மா!"

"பரவாயில்ல வாங்க!" என்றான் அஜய். அதற்கு மேல் அவள் ஒன்றும் பேசவில்லை. இருவரும் ஏறி உட்கார்ந்தார்கள் .

அரை மணி நேரம் ஆயிற்று அவர்கள் வீடு போய் சேர, வழியெல்லாம் பார்த்துக் கொண்டே போனாள், ஊரில் நிறையவே மாற்றம் இருந்தது. அது நல்லதா இல்லையா என்று புரியவில்லை அவளுக்கு

அவர்கள் வீடு இருக்கும் தெருவில்  கார் நுழைந்தது, தனம் தான் வீட்டை அடையாளம் காண்பித்தாள். கார் அவள் வீட்டின் முன்  நின்றது. வீட்டின் வெளியே யாருமில்லை டாக்சிக்கு பணத்தை கொடுத்து விட்டு வீட்டின் உள்ளே நுழைந்தனர், கதவு திறந்தே இருந்தது ஆனாலும் கதவை தட்டினாள் தனம். அவளுடைய தங்கை வள்ளி தான் வெளியே வந்தாள், "நீங்க யாரு?" என்று கேட்டாள் அவள் தங்கை.

 

"என் பேர் தனலட்சுமி, உங்க அம்மா இருக்காங்களா?" என்று இவள் சொல்ல, அஜய் அதிசயமாக பார்த்தான் தன் அம்மாவை .

"தனம்க்கா, எனக்கு சந்தேகமா இருந்தது , ஆனா நீ எங்க வர போறீங்கன்னு நினைச்சேன். உள்ள வாக்கா, ஏன் வெளியவே இருக்க....? அம்மா தனம்க்கா வந்திருக்கா!"

அவள் அம்மா அப்பா, இன்னுமொரு தங்கை பார்வதி எல்லோரும் வெளியே வந்தார்கள், இவளை பார்த்தவுடன் அடையாளம் தெரியவில்லை அவர்களுக்கு , "தனம்மா, உன்னை அடையாளமே தெரியல, வா, எப்படியிருக்க ?" என்று அவள் அம்மா கேட்டாள்.

"நன்னாயிருக்கேன்மா, நீங்கள்லாம் எப்படியிருக்கீங்க?"

"நன்னாயிருக்கோம்னா அது பொய், ஏதோ இருக்கோம்ன்றதுதான் உண்மை."

அவள் அஜயை பார்த்தாள், அவனும் அவளை பார்த்தான்.

"இது யார்?" என்று அஜயை பார்த்துக் கொண்டே கேட்டாள், அவள் அம்மா லக்ஷ்மி.

தனம் கொஞ்சம் தயங்கினாள்.

"நானே சொல்றேன் பாட்டிம்மா, நான் அஜய், நான் தனம்மாவோட மகன் உங்க பேரன் பாட்டிம்மா!"

லக்ஷ்மி அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டாள்…..

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.