(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

" அப்போ அவரும், சின்ன பையன் தானே, அவரால எப்படி அவங்க பெத்தவங்ககிட்ட சொல்லாம வரமுடியும், இல்லையா? அதுக்கப்புறம், நீ வேற ஊரைவிட்டு போயிட்ட, திரும்பி அந்த ஊருக்குப் போகவேயில்லைன்னு சொன்ன, அவர் வந்து உன்னை தேடியிருந்தா? "

" அதுவும் சரிதான், நீ ரொம்ப புத்திசாலி, நிறைய திங்க் பண்ணி பேசற.."

"உன்னால இப்படி திங்க் பண்ண முடியல ஏன்னா, நீ பாதிக்கப் பட்டவ அதான். நான்  எதிர்பக்கம் இருந்து அட்வைஸ் கொடுக்கிறவன். " என்று அம்மாவை நோக்கி நமட்டு சிரிப்பு சிரித்தான்.

"காலேஜுக்குப் பணம் கட்டனும், இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டியா?"

" பண்ணிட்டேம்மா நாளைக்கே போய் டிடி எடுத்துடலாம், நீயும் லீவ் போட்டு வரேல்ல? "

"கண்டிப்பா? சரி நாளைக்கு பாட்டி தாத்தாவை போய் பார்க்கலாம்!"

"நான் சொன்னேன்ல, உங்க அப்பாவை கண்டு பிடிக்காம போக மாட்டேன்னு, அப்புறம் என்ன போலாம், போலாம்ற?"

"அம்மா நாம போறோம், மேக்கப் யுவர் மைண்ட்! "

"ஏன் அஜய் எனக்கு நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு ஆபிஸ்ல!"

"வெல், அதை தள்ளிப் போடு, இல்ல வேலையே வேணாம், இப்போதான் ரொம்ப பிஸி பாடகி ஆயிட்டியே அப்புறம் எதுக்கு இந்த வேலை?"

"அப்படியெல்லாம் சொல்லாத அஜய், எவ்வளவு கஷ்டப் பட்டு படிச்ச படிப்பு, எத்தனை பேருக்கு வேலை கிடைக்காம, கிடைச்சா அதுக்கேத்த சம்பளம் கிடைக்காம கஷ்டப் படறாங்க தெரியுமா?"

"சாரிம்மா புரியுது, ஆனா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கோ, எப்பபாரு, ரிலீஸ்னு ராத்திரி, பகல்னு, வீட்டுக்கு வந்தாலும் அதுலயே இருக்கே, சனி ஞாயிறு, ரெகார்டிங்க்கு போற, உனக்குன்னு கொஞ்சம் ப்ரீ டைம் வேணாமா?"

"இனி ட்ரை பண்ணறேன் நீ சொல்ற மாதிரி டைம் எடுத்துக்கறேன் அட்லீஸ்ட் உனக்காகவாவது ப்ரீ ஆகிக்கறேன், சரி வா படுக்கலாம், பேசி பேசியே டைம் ஆயிடுத்து. "

"அம்மா தேங்க்ஸ்"

"எதுக்கு?'

"என்னை ஒரு பிரெண்டா நினைச்சு மனசுல இருக்கிறத எல்லாம் ஷேர் பண்ணின்டியே அதான்!'

அவள் ஒரு விரக்தி சிரிப்பு சிரித்து, "இது வரை ஒரு பிரெண்டுன்னா அது உங்க அப்பா

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.