(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

மட்டும்தான், அதுக்கப்புறம், மனசுல இருக்கிறத ஷேர் பண்ண ஒருத்தரும் கிடையாது, இப்போதான் உன்னிடம் எல்லாம் சொன்னேன்."

"தெரியும் அதுக்குத்தான் தேங்க்ஸ் சொன்னேன்!"

"உன் நண்பர்களெல்லாம் பிரிஞ்சு போயிட்டாங்க, உனக்கு கஷ்டமாயிருக்கா?"

"நான் கூட எதிர்பார்க்கல, மாஸ்டர் அப்படி செய்வாருன்னு."

இல்ல அஜய், அவர் செய்ஞ்சதும் தப்பில்லை, எல்லாரும் அவங்கவங்க காலில் நிற்கணும், அவங்களுக்கு ஒரு பார்ட் டைம் வேலை வாங்கி அவங்களுடைய தேவைக்கு அவர் உதவி செய்துதானே அனுப்பியிருக்கார். அது நல்லது தானே, நீயும் வேலை செய்து சம்பாதித்து தானே வாழறே, அதே தான் அவங்களுக்கும். என்ன அவங்களுக்கு அம்மா அப்பா இல்லேன்னுதானே? லீவ் நாளில் அவங்கள இங்க கூட்டிட்டு வா, நம்ம  வீட்டிலேயே சாப்பிட்டு நல்லா என்ஜாய் பண்ணிவிட்டு " என்று தன்  மகனிடம் அவனுக்கு ஏத்தமாதிரி கூறினாள். அவனும் சந்தோஷத்தில் "தாங்க்ஸ்ம்மா" என்றான் .

அவன் கன்னத்தை தடவிக் கொடுத்தாள், மென்மையாக சிரித்து விட்டு "சரி வா, தூங்க போலாம்!" என்று கூறி எழுந்துக் கொண்டாள்.

அடுத்த நாள் அவன் காலேஜ் பீஸ் எல்லாம் கட்டிவிட்டு அஜய், தனத்திடம்,

"வாம்மா நாம ஊருக்கு போகலாம் நாம தாத்தா பாட்டிய பார்க்கலாம்" என்று கூறினான்.

"இல்ல அஜய் இப்ப வேணாம் அப்புறம் எப்பவாவது போலாம்!" என்றாள் எப்படியாவது போவதை தடுக்க.

"இல்லம்மா இப்பவே போகணும், நான் பாட்டி தாத்தாவை பார்க்கணும்!" என்றான், பிடிவாதமாக .

 

"சரி, வீட்டுக்கு போய் துணிகளை எடுத்துக் கொண்டு போலாம்! "என்றாள் தனம் .

"சரிம்மா! "என்று காரில் ஏறி கொண்டு,

 "செல்வம் அண்ணா, நாம இப்போ அம்மாவோட ஊருக்கு போகணும், நாம ரெண்டு நாளைக்கு அப்புறம்தான்  வருவோம்"

"இல்ல அஜய் நாம ட்ரைன்ல போலாம் ரோடு எல்லாம் எப்படி இருக்கோ என்னவோ நாம டிரெயினிலேயே போலாம். "என்றாள் தனம், "சரி, எப்படி வருவோம்?" என்று கேட்டான் அஜய் .

"டிரெயினிலேயே தான்," என்றாள் தனம்.

"சரி டிரெயினிலேயே போகலாம் வா!"என்றான் .

அவர்கள் கிளம்பி ஊருக்கு டிரெயினில் சென்றார்கள். இரவு ஊருக்கு போய் சேர்ந்தனர், ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் எல்லாமே மாறி இருந்தது. அவளுக்கு அடையாளமே

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.