(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"இல்லம்மா என் சிநேகிதி, நாங்க ரெண்டு பேரும் இங்கதான் ஸ்கூல் ஒண்ணா படிச்சோம். இப்ப இவ சென்னைல பெரிய கம்பெனியில வேலை பார்க்கறா, கை நிறைய சம்பாதிக்கறா. நம்ம ஊர்தாம்மா, இவ லக்ஷ்மி அம்மா தெரியுமில்லையா அவங்க பொண்ணு."

"எந்த லக்ஷ்மி அம்மா? வேங்கடரமணா புறம் லக்ஷ்மி அம்மாவா? அவங்க மகளா??"

"ஆமாம்மா!" என்று தனமே கூறினாள்.

"நல்லதும்மா உள்ள வாங்க பேசலாம்! " என்று உள்ளே சென்றார்கள்.

"உக்காரும்மா, நான் அவர கூப்பிடறேன், அவர் வந்ததும் அவர்கிட்ட பேசும்மா." என்று கூறிவிட்டு,  "சரசு உள்ள வா" என்று கூப்பிட்டுக் கொண்டு போனார் அந்த பெரிய வீட்டம்மா.

உள்ளே சென்று அவள் கணவரிடம் விஷயத்தை சொல்லி ஹாலுக்கு அனுப்பிவிட்டு அவர்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரலாம் என்று உள்ளே சென்றார்.

"யாரும்மா வாங்க என்னவோ பேசணும்னு வந்திருக்கீங்களாமே, சொல்லுங்கம்மா என்ன விஷயம்?" என்று கேட்டார் ஊர் பெரிய மனுஷர் தனுஷ்கோடி.

 

"ஆமாம் ஐயா என் பேர் தனலட்சுமி, நானும் இந்த ஊர்தான். இங்க ஸ்கூல் வரை படிச்சுட்டு நான் ஸ்கூல் பாரஸ்ட் வந்தேன். பிறகு நான் வெளியூருக்கு போய் காலேஜுல சேர்ந்து இன்ஜினியரிங் படிச்சுட்டு, ஒரு பெரிய கம்பெனியில் டீம் லீடெரா இருக்கேன். அது மட்டுமில்ல நான் ஒரு திரைப்பட பாடகியாகவும் இருக்கேன். இந்த டீடைல்ஸ் எல்லாம் ஏன் சொல்றேன்னா, உங்களுக்கு, எங்களை பத்தி தெரியணும். ஏன்னா, நாங்க இந்த ஊருல விளைச்சல் நிலம் வாங்கணும்னு முடிவு பண்ணியிருக்கோம், சரஸ்வதி என்னோட படிச்சவ, நீங்க உங்க நிலத்தை விற்க போறதா சொன்னா அதான் உங்களிடம் பேச வந்திருக்கேன் ."

"அப்படியா? சரி நீங்க நிலத்தை பாருங்க, பிறகு ரேட் எல்லாம் பேசிக்கலாம்! " என்றார் தனுஷ்கோடி.

"இல்ல ஐயா எங்களுக்கு ரேட் சொன்னீங்கன்னா எங்களுக்கு ஒரு பட்ஜட்  இருக்கு அதுக்குள்ள வருமான்னு தெரிஞ்சுண்டு நாங்க பார்க்கறோம். இல்லேன்னா ரெண்டு பேருமே டைம் வேஸ்ட் பண்ணவேண்டாம். "

அதுவும் சரிதாம்மா என்னோட நிலம் நிறையவே இருக்கு நான் வெறும் அம்பது ஏக்கர் தான் இப்போ விக்க போறேன், அது ஒரு தனி பீஸாவே இருக்கு அதுக்கு மொத்தம் அஞ்சு கோடி, அதோடு இந்த வீட்டையும் சேர்த்து கொடுத்துடறோம்."

"ஐஞ்சு கோடியா ஐயோ முடியுமா தெரியலையே?" என்று அஜயை பார்த்தாள், அஜய் போன் எடுத்து ஜாபருக்கு கால் செய்தான். விஷயத்தை, கூறினான்," நீங்க எப்போ ஊருக்கு போனீங்க

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.