(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

நாளே ரெஜிஸ்டர் பண்ணிடலாம் தனுஷு, ஏன்னா அவங்க இப்போ அங்க வந்திருக்காங்க , திரும்பி ரிஜிஸ்டிரேஷனுக்கு வரணும்னா கஷ்டம் , அதனால நாளைக்கே வச்சுடு. நீங்க எவ்வளவு நாளோ மாசமோ அங்கேயே இருக்கலாம்," என்று ஜாபர் கூறிவிட்டார்.

அடுத்தநாள் காலை, எல்லோரும் எழுந்து விட்டார்கள், தனமும், அஜயும் காலை ஏழு மணிக்கு எழுந்து வந்தார்கள். "என்னம்மா காபி கொண்டு வரவா? " என்று லக்ஷ்மி கேட்டாள்.

"அஜய் வந்துடட்டும்! " என்றாள் தனம்.

"வந்துட்டான்மா!" என்று அம்மா சொல்லவும் .

"யாரு அஜயா?" என்று திரும்பி பார்த்தாள், தனம்.

"ஆமாம்மா" என்றான் அஜய், அவளை அனைத்துக் கொண்டு.

"குட்  மார்னிங்மா!"

 

"குட் மார்னிங் அஜய், என்னடா இன்னும் கொஞ்சம் தூங்கறதுதானே?"

"இல்ல மாம் தூக்கம் போயிடுச்சு, அதான் நான் எழுந்து வந்துட்டேன்!"

"சரிம்மா, நாங்க ரெண்டு பேரும் கஞ்சி சாப்பிடறோம்மா."

"இதோ பத்து நிமிஷத்துல போட்டுட்டு வரேன் " என்று உள்ளே போனார்

"செல்வம் எங்க அஜய்?"

"அண்ணா காபி குடிச்சுட்டு , காரை க்ளீன் பண்ணிட்டிருக்காரு. "

அப்போது தனத்தோட போன் மணி அடித்தது, போய் போனை எடுத்தாள் தனம், "ஹல்லோ ?"

"ஹலோ, நான் தனுஷ்கோடி பேசறேம்மா!"

"சொல்லுங்க ஐயா, குட் மார்னிங்! சொல்லுங்க?"

" ஜாஃபர் நேத்து ஃபோன்ல, இன்னிக்கே ரெஜிஸ்டரேஷன் வச்சுக்க சொன்னாரு, நான் நேத்தே ரெஜிஸ்டரார் கிட்ட பேசிட்டேன் இன்னிக்கு பதினோரு மணிக்கு வச்சுக்கலாம்னு சொன்னாரு!"

"சரிங்க ஐயா, பதினோரு மணிக்கு நானும் அஜயும் வந்துடறோம்."

"இல்லம்மா எனக்கு உங்களோட தகவல்கள் வேணும்மா, அது உங்க ஐ டி எல்லாம் இருக்காம்மா கையில?"

"ஐயா எப்பவும் காபி வச்சிருப்பேன், ஆனா ஒரிஜினல் இல்லையே பரவாயில்லையா?"

"ரெஜிஸ்டரார் நமக்கு தெரிஞ்சவர்க்தான் சொல்லி பார்க்கறேன், சரி அப்போ ரெடியா இருங்க, ஒரு பத்தரைக்கா வந்துடுங்க எல்லாம் ரெடி பண்ணிடலாம், நான் கார் அனுப்பறேன். "

"சரி ஐயா நாங்க பத்தரைக்கு வந்துடறோம், ஐயா எங்க கார் சென்னைலேர்ந்து வந்துடுத்து நாங்க வந்துடறோம் ஐயா, கரெக்ட்டா பத்தரைக்கு வந்துடுவோம். "

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.