(Reading time: 60 - 120 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

'இல்ல தனம், நம்ம கூட படிச்ச கணேஷ் தெரியுமா?"

"யார் கணேஷ்?"

"ஹஹா, அவனை ஞாபகம் இல்லையா, நம்ம க்ளாஸ் துளசிகிட்ட லெட்டெர் கொடுக்கறேன்னு டீச்சர்கிட்ட மாட்டிண்டு மன்னிப்பு கேட்டானே ஞாபகம் இருக்கா?"

"ம்ம்... ஏதோ கொஞ்சம் ஞாபகம் இருக்கு !" தனம் கொஞ்சம் யோசித்து கூறினாள்.

"அவன் பாவம் வேலை இல்லாமல் இருக்கான், அவன் தோட்ட கலைதான் படிச்சிருக்கான், இப்போ நிறைய நிலங்கள் எல்லாம் விளைச்சல் இல்லாம கஷ்டப் படறாங்க. அதனால அவனுக்கு படிச்சுட்டு வேலை இல்லாம இருக்கான் பாவம் .அவனுக்கு இந்த வேலையை கொடேன், நீ இஷ்டப் பட்டாதான்," சொல்லி அவளுடைய பதிலுக்கு காத்திருந்தாள் சரஸ்வதி.

அவள் ஜாஃபரின் முகத்தை பார்த்தாள், அஜயையும் பார்த்தாள் .

ஜாஃபர் அவள் பார்வையை புரிந்து கொண்டு, "நான் ஏற்கனவே சொன்னேனே எல்லாம் உன் முடிவுதான், நீ என்ன முடிவு பண்ணாலும் எனக்கு சந்தோஷம்." சொல்லிவிட்டு நிக்கத்தை பார்த்தார்.

அவரும் கண்ணால் 'சரி' என்று ஜாடை காட்டினார்.

அஜயும், "மாஸ்டர் சொன்னதுதான் , நீ என்ன டிசைட் பண்ணாலும் அதில் எனக்கு ஓகே தான்!" அஜயும் மென்மையாக சிரித்துக் கொண்டே கூறினான்.

"நீ ஒன்னு செய்யேன் அந்த கணேஷை எங்களை உடனே ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வந்து பார்க்க சொல்லேன் , நாங்க இன்னிக்கே ஊருக்கு போயிடுவோம். திரும்பி எப்போ வரமுடியும்னு  தெரியாது "

"அதுக்கென்ன இப்பவே போய் அவன்கிட்ட சொல்றேன், அவன் கண்டிப்பா உன்ன வந்து பார்ப்பான். "

'சரி அதுக்குதான் உன்னை கூட்டேன், நீயும் முடிஞ்சா வா அங்கேயே எல்லோரும் ஒன்னா பேசிடலாம். "

" சரி நானும் வரேன்!" சரஸ்வதி உற்சாகமாக கூறினாள் .

ரெஜிஸ்டரேஷன் ஆபிசில் அவர்கள் காத்திருந்த நேரத்தில் கணேஷிடமும், சரஸ்வதியிடமும் பேசினாள் தனம்.  நடு நடுவில் தனுஷ்கோடி ஐயாவும், ஜாஃபரும், நிக்கத்தும் கொஞ்சம் அட்வைஸ் கொடுத்தார்கள் அதையும் ஏற்றுக் கொண்டாள். தனம் அங்கு விளையும் காய்கறி பழங்களை பறித்து பதம் செய்து அதை டவுனிற்கு ஏற்றுமதி செய்ய போகிறார்கள், அதுதான் திட்டம். அதை பேசி முடிவெடுத்தாள் அந்த கணேஷிடம், அவனும் தனக்கு தெரிந்த ஐடியாவெல்லாம் கொடுத்தான், அதில் தனக்கு பிடித்ததெல்லாம் எடுத்துக் கொண்டாள் ,

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.