(Reading time: 20 - 39 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

 “இப்பவே நாங்கெல்லாம் பயத்தோடதான் நின்னுட்டிருக்கோம்...எந்த நிமிஷத்துல...எந்த திசையிலிருந்து பாய்ஞ்சு வருமோ?ன்னு

 “டேய்..ரெண்டு மூணு நாளாவே அது வேற மாதிரி உறுமிக்கிட்டிருக்குன்னு சாரே சொல்றாரு...அப்படின்னா அதுக்கு வெறி பிடிச்சிருக்கும் போலிருக்குடா...வெறிநாய்க்கடி ரொம்ப டேஞ்சர்டா!

 “நாய்க்குத் தடுப்பூசி வேற போடலையாம்!

 “அய்யய்யோ...என் குழந்தைக்கு என்னாச்சும் ஏடாகூடமா ஆயிட்டா நான் என்ன பண்ணுவேன்?...எங்க போவேன்?” கூட்டத்தில் ஒரு பெண் ஒப்பாரியை அங்கேயே துவக்க,

டென்ஷனாகிப் போன தீனதயாள் பற்களை “நற...நறவென்று கடித்தவாறே இப்ப அந்த நாய் எங்கிருக்கு?” கேட்டார்.

 “அடுத்த தெருவுல இருக்கற பூங்காவுக்குள்ளார ஒளிஞ்சிட்டு இருக்கு!....அப்பப்ப வெளிய வருது...யாரையாச்சும் கடிச்சிட்டு ஓடிப் போயி மறுபடியும் அங்கியே ஒளிஞ்சுக்குது!

 “நீங்க பயப்படாதீங்க!...இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த நாய் உசுரோடவே இருக்காது!தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியைத் தொட்டவாறே சொன்னார் தீனதயாள்.

அவரது அந்தப் பேச்சில் லேசான நம்பிக்கை துளிர் விட கூட்டம் கலைந்தது.

போகும் கூட்டத்தைப் பார்த்து “த பாருங்கப்பா!...யார் யாருக்கு எவ்வளவு மருத்துவ செலவு ஆச்சுன்னு வந்து சொல்லுங்க...அதையெல்லாம் நானே தந்துடறேன்!என்று கத்தலாகச் சொன்னார் தீனதயாள்.

கூட்டம் சென்றதும் கார்ப்பரேஷனுக்கு போனில் தகவல் தந்து விட்டு துப்பாக்கியுடன் காத்திருந்தார் தீனதயாள்.

 “என்னங்க...சீஸரைச் சுடப் போறீங்களா?” மகேஸ்வரி மெல்ல வந்து கேட்க

 “யெஸ்...என்றார் தீனதயாள் கண்டிப்புடன்.

 “வேண்டாம் டாடி!...மகேஸ்வரியின் முதுகுக்குப் பின்னாலிருந்து நிவேதிதாவின் குரல் வந்தது.

 “நோ...இந்த விஷயத்துல யாரும் என்னைக் கன்வின்ஸ் பண்ண வேண்டாம்!...நான் முடிவு பண்ணிட்டேன்.. எப்ப நம்ப சீஸர் வெறி பிடிச்சு...பொது மக்களைக் கடிக்க ஆரம்பிச்சுதோ...அப்பவே அது உயிரோட இருக்கத் தகுதியில்லையென்று ஆயிடுச்சு!...ஸோ..அதைக் கொல்றதைத் தவிர வேற வழியேயில்லை!

 “இல்லை டாடி....அதை நைஸா பிடிச்சிட்டுப் போயி..டாக்டர்கிட்ட டிரீட்மெண்ட் குடுத்துப் பார்க்கலாம் டாடி!

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.