(Reading time: 5 - 10 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

அருள்வாக்கு கேட்க உப்பாயம்மன் குலத்தினர் கூடியிருக்க, அந்த ராஜேஸ் என்கிற இளைஞனின் பெற்றோர்கள் அந்தக் கூட்டத்தில் உள்ளார்களா?...என்பதை நிதானமாய் ஆராய்ந்தார் சுதாகர்ஜி.

ராஜேஸின் தாய் இந்திராவும், அவள் கணவர் வெங்கிடுபதியும் அருள் வாக்குக் கேட்க காத்திருக்கும் கூட்டத்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்தனர்.

அருள் வாக்கு கேட்க வந்திருக்கும் மக்கள் எல்லோருக்குமே அந்த பாக்கியம் கிடைத்து விடாது, சுதாகர்ஜி யாரை அழைக்கிறாரோ...அவர்கள்தான்  அவர் எதிரே வர வேண்டும், அவர்களுக்கு மட்டுமே அவர் அருள் வாக்குத் தருவார்.

ஒரு சிறிய சம்பிரதாய பூஜைக்குப் பின் சுதாகர்ஜியின் மீது அம்மன் இறங்க, முதலில் வேறு இருவரை அழைத்து, அவர்களுக்கு அருள்வாக்கு கூறி அனுப்பி விட்டு, மூன்றாவதாய் ராஜேஸின் தாயையும் தந்தையையும் அழைத்தார்.

சுதாகர்ஜியின் அருகில் வந்த வெங்கிடுபதி ஏதோ சொல்ல வாயெடுக்க,

“ம்ம்ம்ம்ம்” என்று அதட்டி அவர் வாயை அடைத்து விட்டு, “புத்திரனின் விவாகம் குறித்து நித்திரையிழந்து வந்திருக்கும் முத்திரைத் தம்பதியரே!...உம் புத்திரன் விவாகம் மற்றோர் இனத்திலேறும்!...எவ்வினமும் எனக்குள் அடக்கமே...எக்குலமும் இங்கு என் குலமே....” என்று சுதாகர்ஜி சொன்னதும்,

“புரியலையே ஸவாமி” என்றாள் இந்திரா.

“மங்கா குளம் மடத்துக்குளம்...மங்கையவள் எந்தன் குலம்!...மருமகளாய் வந்திடுவாள்!...மாற்றினமானாலும் அவளை....மனமுவந்து ஏற்றிடுவீர்...மறுப்புக் கூற......மறு ஜென்மத்திலும்...மகனுக்கில்லை மணமாலை!”

சுதாகர்ஜி சொன்னதை அப்படியே தன் மனதில் பதித்துக் கொண்டார் வெங்கிடுபதி.

ஏழு பேருக்கு ம்ட்டும் அருள் வாக்கு சொல்லி விட்டு, மற்றோரைத் திருப்பியனுப்பினார் சுதாகர்ஜி.

எல்லோரும் சென்ற பின் அவரருகில் வந்த வெங்கிடுபதி, தன் மனதில் பதித்து வைத்திருந்த அம்மனின் அருள் வாக்கு வார்த்தைகளுக்கு விளக்கம் கேட்க,

“எங்கே...அம்மன் சொன்ன வார்த்தைகளை திருப்பிச் சொல்லு” சுதாகர்ஜி கேட்டார்.

“மங்கா குளம் மடத்துக்குளம்...மங்கையவள் எந்தன் குலம்!...மருமகளாய் வந்திடுவாள்!...மாற்றினமானாலும் அவளை....மனமுவந்து ஏற்றிடுவீர்...மறுப்புக் கூற......மறு ஜென்மத்திலும்...மகனுக்கில்லை மணமாலை!”

“ம்ம்ம்...அப்படியா அம்மன் வாக்குக் குடுத்தா?” என்றபடி தன் தாடையைத் தட்டிக் கொண்டு

2 comments

  • Samiya kuda vida matengurangale ena sketch ena sketch :D nice update sir 👏👏👏👏👏👏<br />Sundar ji vera level kk promote agitaru pole 😜<br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.