(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

 அன்று சனிக்கிழமை, ஒவ்வொரு சனிக் கிழமையும், தன் மகனுடன் ஜாகிங் முடிந்து வந்தவுடன் தலைக்கு குளித்து தோட்டத்தில் பூக்களை பறிக்கும்போது அதனுடன் பேசிக் கொண்டேயும், பாட்டு பாடிகொண்டேயும்,   பூக்களை பறிப்பாள், அதை அவள் மகன் தூரத்திலிருந்து வீடியோ  எடுத்து வைப்பான்.   பூக்களை பறித்து பூஜை செய்து, தானே தன் மகனுக்கு சமைத்து போடுவாள். அவனுடன் நாள் முழுதும் பாட்டு புக்ஸ் என்று பலவிதமாக பொழுதை கழிப்பார்கள்.

அப்படித்தான் அன்றும் சனிக் கிழமை தன் மகனுடன் ஜாகிங் செய்து விட்டு குளித்து முடித்து தோட்டத்துக்கு வந்தாள். எப்போதும் போல் பாட்டு பாடிக் கொண்டே, செடிகளுடன் பேசிக் கொண்டே பூக்களை பறித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று "ஹா" என்று கத்தியவாறு கீழே விழுந்தாள். அந்த பாக்கம் வந்த சுமதி அதை பார்த்து "ஐயோ யாராவது ஓடிவங்களேன், அம்மா மயங்கி விழுந்துட்டாங்க! "என்று கத்தினாள்.

அதை கேட்ட அஜய் வேகமாக ஓடும்போதே "டாட், சீக்கிரம் ஓடி வாங்க அம்மா மயங்கிட்டாங்க !" என்று கத்திக்கொண்டே வெளியே ஓடினான். 

தூங்கி கொண்டிருந்த அப்துல் எழுந்து ஓடி வந்தான். அதற்குள், அவள் கையில் கத்தி ஒன்று குத்தி இருந்ததை கவனித்த அஜய், " ஓ மாம்! யார் உன்னை கத்தியால் குத்தியது? யாரும்மா?" என்று கலங்கிய வண்ணம் அம்மாவை மெதுவாக தூக்கி தன் காருக்கு ஓடினான் . அப்போது அங்கே ஓடி வந்து பார்த்த அப்துல் "என்ன ஆச்சு அஜய்? என் தனத்துக்கு என்ன ஆச்சு?" என்று கத்தினான்.

"டாட் காம் டவுன், இப்போ உடனே நாம அம்மாவை ஹாஸ்பிடல் கூட்டிண்டு போகணும், சீக்கிரம் என் கார்ல ஏறுங்க?"

அவன் போட்டுக் கொண்டிருந்த பஜமாவோடவே காரிலே ஏறினான் அதையெல்லாம் பார்க்க நினைக்க நேரமே இல்லை அங்கு யாருக்கும்.

தனத்தை பின் சீட்டில் படுக்க வைத்து விட்டு சுமதியின் கணவன், அவள் ஓடி போய் அவனிடம் தகவல் கூறியதும் அவன் ஓடி வந்து கார் ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்து வேகமாக பக்கத்திலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓட்டினான்.

'இப்போ சொல்லு அம்மாக்கு என்ன ஆச்சு ?" என்று அப்துல் பட படப்புடன் கேட்கவும் "டாட், அம்மா மேல யாரோ கத்தி எரிஞ்சிருக்காங்க" என்றான் அஜய்.

 "என்னது, என் தனம் மேல காத்தியா?" என்று அப்போதுதான்  அந்த கத்தி குத்தியிருந்த இடத்தை பார்த்து "ஐயோ தனம்! எவ்வளவு வலிக்கிறதோ என் கண்ணுக்கு..." என்று புலம்பினான்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.