(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"அவங்க மயக்கத்துல இருக்காங்க இன்ஸ்பெக்டர், அதுக்கப்புறம் அவங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும். நீங்க நாளைக்கு வந்து அவங்களோட பேசுங்க....ஆனா, இன்னிக்கே அவங்கள டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் மிஸ்டர் அப்துல்," என்று டாக்டர் கூறவும் .

அப்துல் அஜயையும், ஜாஃபரையும் திரும்பி பார்த்தான்.

"ஆனா, டாக்டர் வீட்டுக்கு போயிட்டா அவங்களுக்கு ஒன்னும் பிராபலமிருக்காதா?" என்று ஜாஃபர் கேட்கவும்,

"இல்ல  ஜாஃபர் சார், கைலதான் குத்தியிருக்கு, அதுக்கு நல்லா மருந்து போட்டு கட்டு கட்டியாச்சு, இரண்டு நாளைக்கு ஒரு முறை இங்க வந்து புண்ணு ஆறதான்னு மட்டும் பார்த்தா போதும், அவங்க நல்ல காலம், இதயத்துக்கு பாய்ச்சின கத்தி, கைல குத்திடுத்து."

அப்துல் தன் கோவத்தை முஷ்டியை அழுத்திக் கொண்டு, கட்டு படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.

இதை நிக்கத்தும், அஜயும் பார்த்தார்கள், அஜய் தன் அப்பாவின் தோளில் கையை போட்டு அழுத்தி ஆதரவாக இருந்தான் . யார்ரா பன்னிருப்பான் இந்த மாதிரி? அவளுக்கு யார்னா எதிரி இருக்க முடியுமா? அவ்வளவு வெகுளி ஆச்சே என் தனம்... அவளை யாரு இந்த மாதிரி கத்திய விட்டெறிஞ்சி? ஓ அல்லா! எத்தனை நன்றி சொல்றது உங்களுக்கு!! என் உயிரைவிட மேல என் தனம், அவளை காப்பாத்தி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி!" என்று புலம்பினான், அவன் புலம்பலை பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

"கவலப் படாதீங்க சார், யார்னு கூடிய சீக்கிரமே கண்டு பிடிக்கறோம்."

"இன்ஸ்பெக்டர், இந்தாங்க அந்த கத்தி, அத தொடாம துணியில் சுத்தி வச்சிருக்கேன்." என்று டாக்டர் அபயம் இன்ஸ்பெக்டரிடத்தில் கொடுத்தார்.

"தேங்க்ஸ் டாக்டர், நல்லது பண்ணீங்க!" என்று அதை வாங்கி கொண்டார் .

இன்ஸ்பெக்டர், எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டார். "யார் பன்னிருப்பாங்கன்னு தெரியல வாப்பா, அவன் யாருன்னு மட்டும் தெரிஞ்சா அவனை......"

"என்ன அபு இது, அதான் இன்ஸ்பெக்டர் பார்த்துக்கறேன்னு சொல்லியிருக்காரில்ல அவங்க பார்த்துப்பாங்க விடு.

"அப்படி தனத்துக்கு யாரு எதிரி இருப்பாங்க, அதுவும் கொல்ற அளவுக்கு? எனக்கு ஒண்ணுமே புரியல வாப்பா... அவ யார் வம்புக்கு போகமாட்டா, அவ யார்கிட்டயும் அவ்வளவா பேசக்கூட மாட்டா, அப்படியிருக்கிறவளுக்கு யார் எதிரின்னு புரியலையே?" என்று புலம்பிக் கொண்டிருந்தான் அப்துல்.

"டாட், முதல்ல வீட்டுக்கு போய் கிளீன் பண்ணிட்டு வேற நல்ல டிரஸ் போட்டுட்டு வாங்க

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.